20 June 2009

சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்குமாறு பணிப்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சட்ட விரோத ஆயுதங்களை எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதிக்கு முன்னதாகக் கையளிக்க வேண்டும் என காத்தான்குடி கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற சட்ட விரோத ஆயுதங்கள் தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக்க தெரிவித்தார்.

பள்ளிவாசல்கள் சம்மேளனப் பிரதிநிதிகள், ஜாமி அத்துல் உலமா சபை பிரதிநிதிகள், பிரதேச அரசியல் பிரமுகர்கள் உட்பட பொலிஸ், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த அதிகாரிகளும் கூட்டத்தில் இதில் கலந்துக் கொண்டனர். பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில் ஆயுதங்களை பள்ளிவாசல்கள் மற்றும் ஜாமி அத்துல் உலமா சபை ஆகியவற்றினூடாகவும் கையளிக்கலாம் அவ்வாறு ஆயுதங்களை ஒப்படைக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றார்.

No comments:

Post a Comment