18 June 2009

பயங்கரவாத ஒழிப்புக்குப் பின் ஏ-9 பாதையூடாக தரைவழி போக்குவரத்து

பயங்கரவாத ஒழிப்புக்குப் பின் யாழ். குடா நாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக் கொண்டு 35 தனியார் லொறிகள் நேற்று ஏ-9 பிரதான வீதி ஊடாக யாழ்ப்பாணம் சென்றடைந்தன. மூன்று தினங்களுக்கு ஒரு முறை இந்த லொறிகள் பொருட்களை ஏற்றிச் சொல்லவும் கொண்டுவரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு தடவைக்கு 40 லொறிகள் மாத்திரம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொருட்களை ஏற்றி செல்லும் சகல தனியார் லொறிகளும் ஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் அவைகள் செல்ல அனுமதிக்கப்படும்.இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் சகல லொறிகள் புறப்பட்டுச் சென்றன.உணவு, மரக்கறி, பழ வகைகள் எண்ணெய் உட்பட அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அதேபோல் இந்த லொறிகள் வடபகுதியில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி, பழவகைகள் உட்பட பல்வேறு பொருட்களை எடுத்து வரும்.

No comments:

Post a Comment