சகலரும் ஜக்கியப்பட்டு செயலாற்றுவதன் மூலமே மக்களின் துயர வாழ்வுக்கு முடிவுகட்ட முடியும் - பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் மன்னார் மாவட்ட பிராந்திய செயலாளர் சிவம்
தியாகிகள் தினத்தின் 19 ஆண்டுகள் நினைவு தினத்தையொட்டி பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி யின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி யின் மன்னார் மாவட்ட பிராந்திய செயலாளர் சிவம் உரை நிகழ்த்துகையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் க.பத்மநாபாவும், அவர்களுடன் பதின்மூன்று கட்சி முக்கியஸ்தர்களும் சென்னையில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தினத்தையே கடந்த 19 ஆண்டுகளாக கட்சி தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்தி அனுஸ்டித்து வருகின்றது.
தியாகிகள் தினமானது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருந்து அழிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள், போராளிகள், பொதுமக்கள், யாவரையும் நினைவு கூர்ந்து கடைப்பிடிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் மக்கள் நலன்சார்ந்து மக்களின் உரிமைகளுக்காக உழைத்த பல தியாகங்கள் என் சமூகத்தின் ஒரு சாராரால் கொச்சப்படுத்தப்பட்டு, உண்மைகள் மறைக்கப்பட்டு, வந்ததென்பது துரதிஸ்டவசமானது.
இன்று எம் மக்களின் உரிமைப் போராட்டமும், எம்மக்களை கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் இடமும், எம் மக்களின் நிலமையும், மனிதாபிமானம் கொண்டவர்களை கண்ணீர் விடவைக்கின்றது.
கடந்த காலங்களில் பல தலைமைகளால் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளும், புரிதல் அற்ற போக்கும், மற்றவர்களின் கருத்துக்களுக்கு இடமளிக்க மறுக்கப்பட்டதுமே இன்றைய நிலைக்கு முக்கிய காரணமாகவும் அதே வேளை நல்ல படிப்பினையும் ஆகும்.
எனவே இன்றைய மக்களின் நலனில் இருந்து பகைமைகளை மறந்து தெளிவாக சிந்தித்து தீர்க்கமான முடிவுகளை சகலரும் ஜக்கியப்பட்டு செயலாற்றுவதன் மூலமே வேண்டும். எமது மக்களின் துயர வாழ்வுக்கு முடிவுகட்ட முடியும். இதுவே மரணித்த தலைவர்களுக்கும், தோழர்களுக்கும், போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் நாம் செய்யும் உண்மையான தியாகிகள் தினமாகும். நூம் அவர்களுக்கு செலுத்தும் இதயபூர்வமான அஞ்சலியாகும் என க .ஞானதாஸ் சிவம் தெரிவித்தார். மன்னார் மாவட்ட அலுவலகத்தில் தியாகிகள் தினத்தை நினைவு கூர்ந்து அதன் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா அவர்களின் உருவப்படம் தாங்கிய பந்தல் அமைக்கப்பட்டு 19-06-2009 அன்று மாலை 4.00 மணிக்கு நினைவஞ்சலி நிகழ்வும் இடம் பெற்றது.
No comments:
Post a Comment