18 August 2009

பாதாள உலக முக்கியஸ்தர்கள் மூவர் சுட்டுக்கொலை

கொழும்பு மாளிகாவத்தையில் 28-08-2009 அதிகாலை 3.15 மணியளவில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த முக்கிய தலைவர்களான வாஜி, டோஜி, சாதிக் ஆகிய மூவர் கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக தெரிவித்துள்ளார்.

இவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தி கப்பம் கோருவதாகப் பொலிஸ் அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, தேடுதல் நடத்தச் சென்ற வேளையிலேயே பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர். ஜும்ஆ மஸ்ஜித் வீதியில் இவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டு கைக்குண்டுகள் ஐந்து, கைத்துப்பாக்கி என்பனவும் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment