08 September 2009

உருத்திரகுமாரன் மீது அமெரிக்கா நடவடிக்கை – பாலித கோஹன

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயற்பட்டுவரும் புலிகள் இயக்கத்தின் தலைவர் வி. உருத்திரகுமாரனுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கை அரசு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

புலிகள் இயக்கத்தின் பிரதான ஆயுத கொள்வனவாளர் கே.பி. எனப்படும் கே. பத்மநாதன் கைது செய்யப்பட்டதையடுத்து புலிகள் இயக்கத்தின் அதியுயர் உறுப்பினராக உருத்திரகுமார் இருந்து வருகிறார் இது குறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன கருத்து தெரிவிக்கையில், தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினரும் பயங்கரவாதத்தை ஆதரித்து வருபவருமான உருத்திரகுமார் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை அமெரிக்கா உறுதிப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார். அமெரிக்க சட்ட முறைமையில் உள்ள சில கட்டுப்பாடுகள் காரணமாக அந்த நாட்டு அரசாங்கம் உருத்திரகுமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமாட்டாது என்று சில வட்டாரங்கள் தெரிவித்திருந்தது பற்றி அபிப்பிராயம் கேட்டபோதே, சர்வதேச சட்டத்தின் கீழ் அமெரிக்கா தெரிவித்துள்ள உறுதிப்பாட்டுக்கு அமைய இந்த நடவடிக்கையை எடுக்க அது கடமைப்பட்டுள்ளது என்றார். புலிகள் இயக்கம் அமெரிக்காவில் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாகும். அதன் மீதான தடையை நீக்குமாறு அண்மையில் அமெரிக்காவில் உள்ள குழு ஒன்று விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment