சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை
இலங்கையின் 62வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள 37 சிறைச்சாலைகளைச் சேர்ந்த 1576 கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பொது மன்னிப்பு பெற்றவர்களில் அதிகமானவர்கள் சிறு சிறு குற்றச்செயல்கள் காரணமாகவும், தண்டப்பணம் செலுத்த முடியாமல் இருந்தவர்களும் ஆவர். 37 சிறைச்சாலைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட போதிலும் மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளிலிருந்தே அதிக கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். விடுதலை செய்யப்பட்டவர்களில் பெண் கைதிகளும் அடங்குவதாக கெனட் பர்னான்டோ மேலும் தெரிவித்தார்.
போகம்பரை சிறைச்சாலையில் 165 பேரும், பள்ளேகல திறந்த வெளி சிறைச்சாலையில் 18 பேரும், மட்டக்களப்பில் ஒரு பெண் கைதி உட்பட 25 பேரும் பதுளையில் 69 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment