08 April 2009

யாழ்ப்பாணத்தில் பாணின் விலை குறைப்பு

யாழ்ப்பாணத்தில் பாணின் விலை குறைப்பு யாழ்ப்பாணத்தில் நாளை (10.04.2009) தொடக்கம் பாணின் விலை குறைக்கப்படவுள்ளதாக யாழ் அரச அதிபர் கே. கணேஸ் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து கப்பல் மூலம் எடுத்து வரப்பட்ட கோதுமைமா யாழ் செயலகத்தினால் வர்தகர்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒருகிலோ மா 72 ரூபாவாகவும் இதுவரை காலம் 44 ரூபாவாக விற்கப்பட்ட ஒரு இறாத்தல் பாண் 43 ரூபாவாக விற்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 83 ரூபாவாக விற்கப்பட்ட சீனி 81 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment