18 May 2009

புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டுஅம்மான், சூசை ஆகியோர் இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள்.

முல்லைத்திவு வெள்ளிமுள்ளிவாய்க்கால் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர், இன்று (18) புலிகளின் தலைவர் வே. புpரபாகரன், புலனாய்புத்துறை தலைவர் பொட்டுஅம்மான், கடற்படை தளபதி சூசை ஆகியோர் அம்புலன்ஸ் வாகனத்தில் தப்பிச் சென்ற வேளை இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.


இத்தாக்குதலையடுத்து அந்தப் பகுதியில் தேடுதல் மேற்கொண்டு வரும் படையினர் சடலங்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக சர்வதேச செய்திச் சேவையான ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. புலிகள் தப்பிச்சென்ற வாகனம் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற முற்பட்டபோதும், இராணுவத்தினரின் துப்பாக்கிக்கிச்சூட்டுத் தாக்குதலில் அவ்வாகனம் தீப்பிடித்ததாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும், பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கும் நடவடிக்கை முடிவடைந்திருப்பதாகவும் இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா அரச தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார் இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளமையைத் தொடர்ந்து கொழும்பின் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் கொழுத்தப்பட்டன. பல்வேறு இடங்களில் இனிப்புக்களும் பால் பொங்கல்களும் வழங்கி மக்கள் கொண்டாடியதைக் காணக் கூடியதாகவிருந்தது.

4 comments:

  1. தலைவரின் நிழலக்கூட சிங்களவனால் நெருங்க முடியாது
    நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும்

    ReplyDelete
  2. பிரபாவின் உடலை மட்டுமல்ல நிழலை கூட இலங்கை இராணுவம் காணக் கூட முடியாது
    நம்புங்கள் நாளை தமிழீழம் நாளை பிறக்கும்

    நிம்மதி நிம்மதி நிம்மதி

    ReplyDelete
  3. தமிழ் செல்வனின் மனைவி தன புது காதலனுடன் புது வாழ்வு அமைக்க இராணுவத்திடம் வந்து சேர்ந்தாள். சூசையின் மனைவி பிள்ளைகள் தன தங்கை குடும்பம் சகிதம் இயக்கத்துக்கு சேர்த்த பணம் பவுண் ஆகியவற்றையும் சுருட்டிகொண்டு தப்பிஓடும்போது இராணுவத்திடம் பிடிபட்டாள்.

    ஆனால் நடேசனின் மனைவி (சிங்கள மொழி பேசுபவர்) கடைசிவரையும் ஆயுதம் ஏந்தி போராடி வீர மரணம் அடைந்தார்

    ReplyDelete
  4. நீதிபதி சமரி டனன்சுரியவின் கட்டளைப்படி அனுராதபுர வைத்தியசாலையில் பிரபாகரனின் பிணத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். புலித் தலைவன் பிரபாகரனின் தலையுக்குள் வெறும் வெடிமருந்து மட்டும்தான் இருந்ததாம்

    ReplyDelete