27 October 2009

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: செம்மொழி தமிழ் மாநாடு சிறக்கட்டும்!
- தீக்கதிர்

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கோவை மாநகரில் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளதோடு, அனைத்து அரசியல் கட்சிகளும் இதில் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து முதல்வர் சார்பில் அனைவருக்கும் கடிதம் எழுதப்பட்டது. ஆளும் கட்சியின் கூட்டணிக்கட்சிகளோடு, அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகளாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவையும் தங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளன.
1995 ஆம் ஆண்டில் எட்டாவது உலகத் தமிழ் மாநாடு தஞ்சாவூரில் நடந்தது. 14 ஆண்டுகளுக்குப்பிறகு அதன் தொடர்ச்சி என்று கூற முடியாவிட்டாலும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் மாநாட்டினை நடத்திட மாநில அரசு முன்வந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் செம்மொழி அந்தஸ்தையும் தமிழ் மொழி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். பொருத்தமாகவே மாநாட்டிற்கு உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பல ஆய்வரங்குகளும், ஆக்கப்பூர்வமான மொழிப்பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.
முழுமை http://www.thenee.com/html/271009-1.html

No comments:

Post a Comment