10 April 2011

கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம்

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தை கிளிநொச்சியில் விவசாய பீடத்துக்கு அருகில் ஆரம்பிப்பதற்கு யாழ்.பல்கலைக்கழக மூதவையும், பேரவையும் இன்று தீர்க்கமான முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக பதிவாளரினால் உத்தியோக பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்ட செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ். பல்கலைக்கழகத்தின் மூதவையும், பேரவையும் பொறியியல் பீடம் ஒன்றை கிளிநொச்சியில் ஸ்தாபிப்பது என்றும் அதற்கான ஆரம்ப வேலைகளை இயன்றளவு விரைவில் தொடங்குவது என்றும் தீர்மானித்துள்ளன. கடந்த கால போர் முடிவுற்ற நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் மூதவையும், பேரவையும் தமது சமூகக் கடமையை நிறைவேற்றும் நோக்குடனும் பீடத்தை அமைப்பதற்கு ஏற்படக் கூடிய செலவீனங்களை குறைக்கும் நோக்குடனும் பொதுவான செலவீனங்களை விவசாயப் பீடத்துடன் பங்கிடக் கூடிய வாய்ப்பையும் முன்னைய குழுக்களின் பரிந்துரைகளையும் கருத்திற்கொண்டு பொறியியல் பீடத்தை மிகவிரைவில் கிளிநொச்சியில் விவசாய பீடத்துக்கு அருகில் தொடங்குதவதற்கான முடிவை எடுத்துள்ளதுடன் அதற்கான விபர அறிக்கையை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அனுமதிக்கு ஓரிரு வாரங்களில் சமர்ப்பிப்பதென முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment