ஸ்ரீலங்காவின் எதிர்ப்பாளாகள், இறுதிக்கட்ட மோதல்களின் போது (2009 ஜனவரி முதல் மே வரை) நடத்தப்பட்ட மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் மேற்கொள்ளப் பட வேண்டும் என அழைப்பு விடுக்கிறார்கள். இநதக் கோரிக் கையில் ஆதிக்கம் செலுத்தும் விடயங்கள் பின்வருமாறு:
• இந்தக் காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளா ர்கள்.
• தாக்குதலற்ற பாதுகாப்பு வலயத்தினுள் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு
• தாக்குதலற்ற பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த பொதுமக்களுக்கான மனிதாபிமான உவிகளை மறுத்ததுடன், வேண்டுமென்றே அவர்களின் எண்ணிக்கையை குறைத்து மதிப்பிட்டது.
பொதுமக்கள் மற்றும் போரில் நேரடியாக பங்குபற்றுபவர்கள் இடையேயான வேறுபாட்டை அறிவதில் சிக்கல் உள்ளதால் தாக்குதலற்ற வலயம் தொடர்பான சட்டங்கள், மற்றும் மனிpமான உதவிகளை மறுத்தல் போன்ற விடயங்கள், கிளர்ச்சிகள் மற்றும் உள்நாட்டு கலவரங்கள் போன்ற விடயங்களில் எழுப்ப முடியாது. அப்படியான விடயங்கள் எழுவது, சர்வதேச அல்லது சர்வதேசமற்ற யுத்தச் சட்டங்கள் பிரயோகிக்கப்படும் ஆயுத மோதல்களில் மட்டுமே. எனவே மேலே ஸ்ரீலங்காவால் இறுதிக்கட்ட மோதலின்;போது மேற்கொள்ளப் பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ள மீறல்கள் யாவும், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களால் ஆட்சி செலுத்தப்படும் சர்வதேசமல்லாத ஆயுத மோதல்களில் பிரயோகிக்கப்படும் யுத்தச் சட்டங்களில் வரையறுக்கப்பட்டுள்ள விதிகளின்படியே விசாரணை செய்யப்பட வேண்டும், அதற்கான பாதுகாவலராக இருப்பது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமே(ஐ,சி.ஆர்,சி).
ஒரு மோதலை ஆயுது மோதல் என்று வகைப்படுத்துவதற்கான வரையறைகள்,1995ல் முன்னாள் யுகோஸ்லாவியாவுக்காக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தினால் (ஐ.சி.ரி.வை) வழக்குத் தொடுநர் எதிர் ராடிக் வழக்கு விசாரணையினபோது நிறுவப்பட்டவையே.
அந்த தீர்ப்பாயம் கூறுவது “… ஆயுத மோதல் இடம்பெறுவதாக நாங்கள் கண்டிருப்பது, எப்போதாவது ஆயுதப்படைகளுக்கு ஒரு புகலிடம் உள்ளபொழுது நாடுகளுக்கு இடையில் போர் நடந்தால் அல்லது அரசாங்க அதிகாரிகளுக்கும்; மற்றும் ஏற்பாடு செய்யப்பட்ட குழுக்கள் அல்லது அத்தகைய குழுக்களுக்கு இடையே ஒரு நாட்டுக்குள் ஆயுதமோதல் எழுந்தால், அங்குதான் ஆயுத வன்முறை நிகழ்வதாக.
1977 ன் மேலதிக வரைமுறையின் பிரிவு 1.1 கூறுவது: “இந்த வரைமுறை ஒரு உயர் ஒப்பந்தக் கட்சியின் எல்லைக்குள் அதன் ஆயுதப் படைகளுக்கும் மற்றும் எதிரான ஆயுதப் படைகளுக்கும் அல்லது வேறு ஒழுங்குபடுத்தப்பட்ட ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் பொறுப்புள்ள கட்டளைகளின் கீழ்,அதன்; கட்டுப்பாட்டு எல்லைக்குள் இருக்கும் ஒரு பகுதியில் நீடித்த மற்றும் ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலக்கூடியதான நடவடிக்கைகள்…”
ஆயுத மோதலில் பொதுமக்கள்
சர்வதேச மனிதாபிமான சட்டத்தில் பிரதானமான பிரச்சினையாக இருப்பது, ஒரு நபரை பொதுமகன் என வரையறை செய்யும் தகுதிக்கான காரணிகள். மோதலில் ஈடுபடும் கட்சிகள் தமது எதிர்த் தரப்பு படைளை தோற்கடிப்பதற்காக வேண்டுமென்றே பொதுமக்களை தீங்கான வழியில் ஈடுபடுத்தாமல் தங்களது வியூகங்களை வகுத்துக் கொள்ள வேண்டும், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டனவா அல்லது இல்லையா என்கிற பிரச்சினை தோன்றும்போது, வழக்கமான போராளிகளிலிருந்து அல்லது ஆயுதக்குழுக்கள் மற்றும் மோதல்களில் நேரடியாக பங்குபற்றுபவர்களிலிருந்து பொதுமக்களை வேறுபடுத்திக் காணும் பிரச்சினை மிக முக்கியமான ஒன்றாக வருகிறது.
பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் அல்லாதோர் இடையேயான வேறுபாட்டை காணும் பிரச்சினை வழக்கறிஞர்கள் மற்றும் கல்விமான்கள் மத்தியில் மிகவும் விவாதம் மற்றும் கலநதுரையாடலுக்கு உரிய ஒரு விடயமாகவே இருந்து வருகிறது. ஆறு வருடங்களாக மேற்கொண்ட கலந்துரையாடல்கள் மற்றும் ஆராய்ச்சிகளின் பின் 2009ல் ஐ.சி.ஆர்.சி “சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் கீழ் மோதல்களில் நேரடி பங்கு பெறுபவர்கள் என்கிற கருத்துக்கு பொருள் விளக்க வழிகாட்டல்” என்கிற தலைப்பில் ஒரு ஆவணத்தை வெளியிட்டுள்ளது,அதேபோல இந்த நிபுணத்துவ நடவடிக்கைகள் இடம்பெற்றபோது சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வெளியிட்டுள்ளது” (ஏசர் நிறுவனம் ஏப்ரல் 2004)
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆவணம் இறுதி தீர்மானமாகத் தெரிவிப்பது: “சர்வதேசமல்லாத ஆயுத மோதல்களில் வேறுபடுத்தும் கொள்கையின் நோக்கம், எல்லா நபர்களும் அரச ஆயுதப்படையின் அங்கத்தவர்கள் அல்ல , அல்லது மோதலில் ஒரு கட்சியாகவுள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட ஆயுதக் குழுக்களில் உள்ளவர்கள் எல்லோருமே பொதுமக்களும் இல்லை, ஆகவே அப்படியான ஒரு நேரத்தில் அவர்கள் நேரடியாக மோதல்களில் பங்கெடுக்காத போது நேரடித் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு அவாகள் உரித்துடையவர்கள் ஆவார்கள். சர்வதேசமல்லாத ஆயுத மோதல்களில், ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுதக்குழுக்கள் அரசாங்கமல்லாத ஒரு கட்சியின் ஆயுதப்படைகளையே மோதலில் கொண்டுள்ளது மற்றும் போரில் நேரடியாகப் பங்குபற்றும் பங்களிப்பை ஆற்றுவதே தங்கள் தொடர்ச்சியான பணியாகக் கொண்ட தனி நபர்களையே அது கொண்:டுள்ளது”
பொதுமக்களின் நேரடிப் பங்களிப்பு
சர்வதேச மற்றும் ஐரோப்பிய சட்ட மையமான ஏசர் நிறுவனம் தெரிவிப்பதன்படி: “… போரில் நேரடிப் பங்கு” என்பதன் கருத்து…ஆயுதமோதல் நடைபெறும் சூழ்நிலையில். ஒரு குறிப்பிட்ட தாக்குதல் அல்லது ஒரு எதிரியான போராளி மீதான தாக்குதல் அல்லது ஒரு பொருளின் மீதான தாக்குதலில் ஈடுபட்டிருத்தலே”(ஏப்ரல் 2004).
ஒரு குறிப்பட்ட நோக்கத்துக்காக முன்னாள் யுகோஸ்லாவியாவுக்காக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தினால்(ஐ.சி.ரி.வை), வழக்குத்தொடுநர் எதிர் குறுனோல்ஜியாக் வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டிருப்பது “ ஒரு தாக்குதல் என்பது வன்முறை நடவடிக்கைகளின் குழு தொடர்புபட்டுள்ள நடத்தை என்று வரையறை செய்யலாம்’ என்று (அதே ஆவணத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது). மேலதிக வரைவுடன்படிக்கை இரண்டின் வர்ணனையில் கூறப்பட்டிருப்பதும் அதே போன்ற ஒரு கருத்தே:” போரில் நேரடிப் பங்கு என்பதன் கருத்து விளக்குவது, பங்குபற்றுபவர்களின் நடத்தைக்கும் மற்றும் அதன் உடனடி விளைவுகளுக்கும் இடையே போதுமானளவு சாதாரண தொடர்பு இருக்கிறது என்பதை” (அதே ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது).
ஏசர் நிறுவன அறிக்கை மேலும் தெரிவிப்பது…” பொதுவாக மற்றும் அதிகரித்து வருமளவில் கருதப்படுவது, பல நடவடிக்கைகளில் பொதுமக்கள் முறைமுகமான பாத்திரங்களில் தொடர்பு பட்டுள்ளார்கள், பொதுமக்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட (புவியியல் ரீதியாக அல்லது தற்காலிகமாக) நடவடிக்கைகள் மேற்கொண்டும் அவர்களால் உண்மையான வன்முறைப் பிரயோகத்தில் இருந்து (அது நேரடியாக என்பதைவிட மறைமுகமாகவும் இருக்கலாம்) விலகியிருக்க முடியவில்லை மற்றும் அவரை போரில் நேரடியாகப் பங்கு கொண்டவராகக்கூட கருத முடியாது, மற்றும் உண்மையில் இலக்கண அல்லது இயக்கவியல் ரீதியான உணர்வில் தாக்குதலில் பங்கு பற்றவில்லை, அல்லது அங்கு மரணங்கள் தொடர்பான உறவு அதிகம் மறைமுகமாகவே உள்ளது, இருந்தும் அவைகள் யாவும் போரில் நேரடிப் பங்கு கொண்டதாகவே கருதப்படுகின்றன.
ஸ்ரீலங்காவில் நேரடிப் பங்கேற்பு
ஸ்ரீலங்கா விடயத்தில் சீருடை அணிந்திருந்த எல்.ரீ.ரீ.ஈ அங்த்தவர்கள் ஒழுங்கமைவான ஆயுதக்குழுவை சேர்ந்தவர்களாக இருந்தார்கள், எனவே மற்றவர்களில் இருந்து வேறுபடுத்தக் கூடியதாக இருந்தது. தங்கள் சீருடைகளை களைந்துவிட்டு தொடர்ந்து மோதலில் நேரடிப் பங்கேற்புச் செய்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களும் உள்ளார்கள். இதற்கும் மேலாக எல்.ரீ.ரீ.ஈ பலவருடங்களாக பொதுமக்களை போராட்டப் பணிக்காக பயிற்சியளித்தும் வந்துள்ளது. இறுதிக் கட்டப் போரில் அவர்களில் எத்தனை பேர்கள் மோதலில் நேரடிப் பங்கேற்புச் செய்துள்ளார்கள் என்பதை தத்ரூபமாக அறுதியிட்டுச் சொல்லமுடியாது. மற்றவர்கள் “உண்மையான வன்முறைப் பயன்பாட்டை விட்டு விலகியிருந்ததால்”; மோதலில் நேரடிப் பங்கேற்புச் செய்தவர்களாகிறார்கள். கூட்டாக மேற்குறிப்பிட்ட வகையை சேர்ந்தவர்கள் சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் கீழ ;உள்ள பிரிவுகளின்படி பாதுகாப்புக்குத் தகுதியற்றவர்களாகிறார்கள். இருந்தும் மோதலில் நேரடிப் பங்கேற்புச் செய்தவர்கள் எத்தனைபேர் என்று யாராலுமே துல்லியமாகக் கணித்துக்கூற முடியாதபடியால், சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் தரத்தின்படி கொல்லப்பட்டவர்களில் எத்தனைபேர் பொதுமக்கள் என்று உறுதிப்படுத்திச் சொல்வது சாத்தியமில்லை, மற்றும் அவர்களில் எத்தனைபேர் பொதுமக்கள் என்ற வகையில் கூட பாதுகாப்புக்குத் தகுதியற்றவர்கள் என்பதும் தெரியாது.
இறுதிக்கட்டப் போரில் பல்லாயிரக் கண்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்கிற கூற்று பல வர்ணனையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களினால் சவால் விடப்பட்டுள்ளது. உரிமை கோரும் இரு தரப்பினர் மற்றும் தங்கள கூற்றைப்பற்றி சவால்விடுப்பவர்கள் அவர்களின் கருத்தை அனுமானிக்கும் வகையில் மோதலில் நேரடிப் பங்கேற்புச் செய்தவர்களில் ஒரு பொதுமகனையாவது தெளிவாக அடையாளம் காண்பதற்கு மற்றும் மோதலின் விளைவுகள் காரணமாக பொதுமகனுக்கு உரிய பாதுகாப்பினை பெற அருகதையற்றவர்கள் அவர்களில் யார் என்பதை கண்டுபிடிக்கவும் திறன் அற்றவர்களாவார்கள்.
ஒரு ஒழுங்கமைவான ஆயுதக் குழுவின் தனியான ஒரு அங்கத்தவருக்குரிய உறுதியான அளவுகோல் என்பது, அந்த நபர் அந்தக் குழுவிற்கான தனது தொடர்ச்சியான செயற்பாட்டை வழங்குவதற்காக போரில் அவன் அல்லது அவள் நேரடியாக பங்கேற்பது ஆகும்” (ஐ.சி.ஆர்.சி), எனவே பொதுமக்கள் என அழைக்கப்படுபவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் எண்ணி;கை நிச்சயமாக கற்பனை மற்றும் அனுமானங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டதாகும், ஏனெனில் மோதலில் நேரடிப் பங்கேற்புச் செய்தவர்களில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை சரியாக நிறுவும் நிலையில் எவருமில்லை. எனவே இறுதி;க் கட்டப் போரின்போது பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதால் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுள்ளன என்கிற குற்றச்சாட்டை நியாயமான முறையில் நிராகரிக்க வேண்டும்.
தாக்குதலற்ற பாதுகாப்பு வலயத்தின் மீதான தாக்குதல்கள
பாதுகாப்பாக அமைக்கப்பட்ட பிரதேசங்கள், தாக்குதலற்ற வலயம் அல்லது பாதுகாப்பு வலயம் என குறிப்பிடப்படுவன, பொதுமக்கள் மற்றும் காயம்பட்ட மற்றும் சுகவீனமுற்றவர்களை பாதுகாப்பதற்காக விசேடமாக அமைக்கப்பட்டவை (ஐ.சி.ஆர்.சி விதி 35). மிகவும் முக்கியமானதாக அப்படியான வலயங்களை பாதுகாப்பான வலயங்களாக அங்கீகரிப்பதற்கு மோதலில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினரதும் எழுத்து மூலமான அனுமதியை பெறவேண்டிய தேவை உள்ளது. அப்படியான உடனபடிக்கை இல்லாதபோது ஒருதலைப்பட்சமான தாக்குதலற்ற பாதுகாப்பு வலயம் என்று அறிவிப்பதில் அர்த்தம் இல்லை. அரசாங்கத்துக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ க்கும் இடையில் எழுத்து மூலமான அத்தகைய ஒரு உடன்படிக்கை கிடையாது, எனவே சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தாக்குதலற்ற பாதுகாப்பு வலயம் என்பதும் கிடையாது என்கிற நியாயமான ஒரு தீர்மானத்துக்கு வரமுடியும், மற்றும் இராணுவ நடவடிக்கை இடம்பெற்ற முழு யுத்தக் களமும் ஒரு ஆயுத மோதல் வலயமாக வருவதுடன் அங்குதான் யுத்தச் சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டன.
யுத்த வலயத்தில் இருந்த பொதுமக்கள் மத்தியில் எல்.ரீ.ரீ.ஈ யின் பிரசன்னம் ஒரு தீவிரமான சவாலை ஏற்படுத்தி இருந்தது, எல்.ரீ.ரீ.ஈ பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியது மற்றும் அரசாங்கப் படைகளுக்கு எதிராக கனரக பீரங்கிளைப் பயன்படுத்தி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது போன்றவை இதில் அடங்கும்: இதற்கான மறுக்க முடியாத ஆதாரங்கள் நிறைய உள்ளன ( ஊழல் மலிந்த ஊடகவியல் - சனல் 4 மற்றும் ஸ்ரீலங்கா, ஸ்ரீலங்கா தொடர்பு 2013, பக்கங்கள் 71 - 101). எல்.ரீ.ரீ.ஈ யின் செயற்பாடுகளின் விளைவு, பொதுமக்களின் பாதுகாப்பை மட்டும் நிராரிக்கவில்லை ஆனால் அவாகளின் முன்னிலையில்; பொதுமக்களை இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வைத்ததின் மூலம் அவர்களுக்குத் தீவிரமான தீங்கினை விளைவிக்கவும் வகை செய்தது. எனவே சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் கீழ் தாக்குதலற்ற பாதுகாப்பு வலயம் அதற்குத் தேவையான தரங்களை கொண்டிருக்கவில்லை.
அதேபோல ஐ.சி.ஆர்.சி விதிகளின் கீழ் பாதுகாப்பு கிடைத்துள்ள மருத்துவ வசதிகள் வழங்கும் இடங்களுக்கு வெகு அருகாமையில் வைத்து எல்.ரீ.ரீ.ஈ இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பாதுகாப்பு உரிமை தகுதியற்றதாகிவிட்டது. இது ஐ.சி.ஆர்.சி விதி 28 படி உறுதியாகிறது, அது தெரிவிப்பது |” மருத்துவ அலகுகள் பிரத்தியேகமாக மருத்துவ நோக்கங்களுக்காக மட்டுமே ஒதுக்கப்படும், அதை மதித்து சகல சூழ்நிலைகளிலும் அதை பாதுகாக்கவேண்டும். அவை அவற்றின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு புறம்பாக, எதிரிக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும்போது, அவற்றின் பாதுகாப்பினை இழந்து விடுகின்றன. எனவே மருத்துவ வசதிகள் உள்ள சுற்றாடலில் எல்.ரீ.ரீ.ஈ இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதின் விளைவு அந்த வசதிகளுக்குரிய பாதுகாப்பை நிராகரிப்பது மட்டுமல்லாமல், காயமடைந்த மற்றும் சுகவீனமுற்றவர்களின் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் கீழ் இத்தகைய நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டவையாகும்.
மனிதாபிமான உதவிகளின் விநியோகம்
ஐ.சி.ஆர்.சி விதி 55 கூறுவது: “மோதலில் ஈடுபட்டுள்ள கட்சிகள் பொதுமக்களுக்கு அவசியமாகவுள்ள மனிதாபிமான நிவாரணங்கள் கிடைப்பதற்கு; விரைவான மற்றும் தடங்கலற்ற வழிகள் மூலம் அனுமதிக்க வேண்டும், அவை பாரபட்சமற்ற தன்மையானதாகவும் மற்றும் பாதகமான எந்த வேறுபாடும் இல்லாததாகவும் இருப்பதுடன் அவர்களின் கட்டுப்பாட்டு உரிமைக்கும ; உட்பட்டது”
ஐ.சி.ஆர்.சி விதி 56 கூறுவது: “மோதலில் ஈடுபடும் கட்சிகள் அதிகாரமுள்ள மனிதாபிமான நிவாரணப் பணியாளர்கள், முக்கியமான தங்கள் செயற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவர்களின் நடமாடும் சுதந்திரத்தை நிச்சயம் உறுதிப்படுத்த வேண்டும். தவிர்க்கமுடியாத இராணுவ அவசியங்கள் உள்ள விடயங்களில் மட்டும் அவர்களது நகர்வுகள் தற்காலிகமாக மட்டுப்படுத்தப்படலாம்”.
மேலே கூறப்பட்ட சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் விதிகளின்படி, அரசாங்கம் மனிதாபிமான உதவிகளுக்கான வழிகளையும் மற்றும் விநியோகத்துக்கான உதவிகளையும் மட்டுமே செய்யவேண்டிய தேவை உள்ளது என்பது ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. எனவே வழ்ப்படும் மனிதாபிமான உதவிகளின் அளவை தீர்மானிக்கும் பிரச்சினை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பெறுப்புக்கு உட்பட்டதல்ல, மேலும் உண்மையில் அங்கு பற்றாக்குறை ஏற்பட்டு இருக்குமானால் அதற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியவர்களே பொறுப்பு. அவர்கள்தான் அதற்குப் பொறுப்புக் கூறவேண்டுமே தவிர ஸ்ரீலங்கா அரசாங்கமல்ல. இந்த குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் பொதுமக்கள், மோதலில் நேரடிப் பங்கேற்புச் செய்த எல்.ரீ.ரீ.ஈ யின் உடனிருந்தார்கள், மோதல் வலயத்துக்குள் மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் எல்.ரீ.ரீ.ஈ க்கு உதவித் தொகையாக சென்றடைந்திருக்கும். மேலே காணப்படும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் கீழான அலுவலக பிரிவுகளுக்கு அப்பால் மோதல் வலயத்துக்குள் இருந்தவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு சட்டப்படி அவசியப்படும் தேவைகளுக்கு மேலாகவும் மற்றும் அதிமாகவும் அரசாங்கம் பங்களிப்பு செய்துள்ளது.
முடிவுரை
ஸ்ரீலங்கா வில் நடந்ததைப் போல, உள்ளக மோதல்களில் ஜனநாயக முறைப்படி தெரிவான அரசாங்கமும் மற்றும் அரசாங்கம் அல்லாத செயற்பாட்டாளர்களும் பங்குகொள்ளும் வேளைகளில் அவை ஆயுத மோதல்களாக வகைப்படுத்தப் படுவதில்லை, அரசாங்கங்கள், அரசாங்கம் அல்லாத செயற்பாட்டாளர்களைக் காட்டிலும் உயர்தரங்களைப் பேணும்படி எதிர்பாhக்கப் படுகிறது. ஒரு மோதல் ஆயுத மோதலின் கீழ் வகைப்படுத்தப் படும்போதுமட்டும்தான் மோதலில் ஈடுபட்டுள்ள கட்சிகளை சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதற்கான பொறுப்புக்கூறலில் சமமாக நிறுத்த முடியும், ஏனெனில் ஐ.சி.ஆர்.சி விதிகளின்படி: “சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், ஒரு சர்வதேச மோதல் ஆன ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்காளிகளையும் தான் கட்டுப்படுத்தும், அது அரசாங்கங்கள் சம்பந்தப் படும்போதுதான் அவதானிக்கப்படும், ஆனால் ஒரு உள்ளக மோதல் ஏற்படும்பொழுது அது அரசாங்கத்தையும் அதேபோல அதற்கு எதிராக போரிடும் குழுவையும் கட்டுப்படுத்தும்…”. ஸ்ரீலங்காவில் நடைபெற்ற மோதல் ஒரு ஆயுத மோதல் என்பதை ஒப்புக்கொள்ள அரசாங்கம் தாமதிக்கும் காலம்வரை, எல்.ரீ.ரீ.ஈ யின் செயற்பாடுகளினால் துரிதமாக்கப்பட்ட சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் மீறல்களை மேற்கொண்டதாக சாட்டப்படும் குற்றச்சாட்டுகளுக்காக ஸ்ரீலங்கா தொடர்ந்தும் பொறுப்புக்கூறலை மேற்கொள்ளும்படியான வற்புறுத்தல்கள் தொடரவே செய்யும்.
மேலே விளக்கியுள்ளதின்படி, இறுதிக்கட்ட போரின்போது எல்.ரீ.ரீ.ஈ யின் செயற்பாடுகள் காரணமாக சர்வதேச மனிதாபிமான சட்டங்களின்படியான எந்த வகையான மீறல் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அதற்கு பொறுப்பேற்க வேண்டியதும் மற்றும் கணக்கு கூறவேண்டியதும் எல்.ரீ.ரீ.ஈ யே. மேலும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களினபடி அங்கீகரிக்கப்பட்ட தாக்குதலற்ற பாதுகாப்பு வலயம் என்ற ஒன்று இல்லை, அதனால் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான உரிமைக்கு பொறுப்பானவர் என்னும் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துக் கொண்டதால் தூற்றுபவர்களின் ஏனைய கூற்றுக்களையும் அரசாங்கம் நிராகரிக்கலாம். அரசாங்கத்தின் செயற்பாடு காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் எனும் குற்றச்சாட்டையும் நிராகரிக்கலாம், ஏனெனில் பொதுமக்களையும் மற்றும் மோதலில் நேரடிப் பங்கேற்புச் செய்தவர்களையும் வேறுபடுத்திக் காட்டும் நிலையில் ஒருவரும் இல்லை. பொதுமக்களின் மரணங்களின் எண்ணிக்கையை நிறுவ மேற்கொண்டுள்ள முயற்சி பயனற்றதும் மற்றும் தெளிவற்றதுமான ஒரு நடவடிக்கை.
எனவே அரசாங்கம் தான் எடுத்துள்ள நிலையை மீளாய்வு செய்து, வரப்போகும் ஜெனிவா கூட்ட அமர்வுகளில் இந்த மோதல் ஒரு ஆயுத மோதல் என்று காட்டவேணடியது தவிர்க்க முடியாத ஒன்று. அத்துடன் ஐநா நிபுணர் குழுவும் இந்த மோதலை முன்னாள் யுகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் அடிப்படையில் ஒரு ஆயுத மோதல் என்று வகைப்படுத்தியிருப்பதை தமது அறிவுக்கு ஆதாரமாகக் காட்டி தமது கூற்றை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், ஸ்ரீலங்கா ஆயுத மோதலுக்கு ஒரு முடிவை கொண்டு வந்த மே 2009 முதல் ஸ்ரீலங்காவை விடாப்பிடியாக துரத்திவரும் பொறுப்புக்கூறல் பிரச்சினையை நம்பத்தக்க வகையில் தீர்க்கக்கூடியதான வாழ்நாளில் ஒருமுறையே கிட்டக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பு கை நழுவிப்; போய்விடும்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
- நெவில் லட்டுவஹெட்டி

No comments:
Post a Comment