26 June 2015

தொழிலாளர்களின் செங்கொடி போராட்டம்

வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊவா பென் ஹெட் தோட்டத்தைச் சேர்ந்த 70 குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கான் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில்  பல காலமாக போராடி வருகின்றனர்

இந்த விடயம் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைத்துத் தரப்பினரிடமும் தாங்கள் முறைப்பாடு செய்தும் எவ்வித பலனும் கிடைக்காததால் கடந்த ஒரு வார காலமாக பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா

பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்த இவர்கள் தங்கள் குடும்பங்களுடன் செங்கொடியை ஏந்தியவாறும், பதாகைகளை ஏந்நியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். .

தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கள் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லையெ அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்து ஒரு தொழிலாளி தெரிவிக்கையில் நாம் எதை கேட்டாலும் பொலிசில் சொல்லி விடுகிறார்கள். அடிப்பதற்கு ஆட்களை கொண்டு வருகிறார்கள் இப்படியெல்லாம் செய்கிறார்கள். 

மேலும் அவர் தெரிவிக்கும் போது எங்கள் குடும்பத்தில் ஒன்பது பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் நானும் எனது மனைவி மட்டுமே உழைத்து சாப்பாடு கொடுக்க வேண்டியுள்ளது. மூன்று திருமணம் முடிக்க வேண்டிய மகன்மார்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் எந்தவொரு வழியையும்; செய்து கொடுக்க முடியாதுள்ளது. லயத்தில் இருக்கும் வீடு  இரண்டு அறைகளை கொண்டது.  அந்த வீட்டில் ஒரு அறை 05 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்டது வீட்டின் உள் அறை 12 இற்கு 10 அடிகளை கொண்டதாகும் நாங்கள் அனைவரும் அந்த அறைகளிலேயே வசித்து வருகிறோம் என்றார்

மேலும் ஒரு பெண் தொழிலாளி இங்கு தெரிவிக்கையில் நாங்கள் காலையில் 6.45 இற்கு வேலைக்கு சென்றால் ஆடு மாடுகளை போல் அடிமையாக நடத்துகிறார்கள். காலையில் வேலைக்கு செல்லும் நாங்கள் மாலை 6.00 மணியளவிலேயே வீடு திரும்புகின்றோம். 
ஆர்ப்பாட்டக்காரர்கள் “நிலையான தீர்வு வேண்டும்”, “உழைக்கும் எம் மக்களின் கரங்களுக்கு உண்மையாய் இரு”, உமக்கான உரிமையை விட்டுக்கொடு: போன்ற வாசகங்களை கொண்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.   
அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் முன்வராமை கவலைக்குரிய விடயமாகும்

No comments:

Post a Comment