27 October 2015

கச்சத்தீவு விவகாரத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்

கச்சத்தீவை இலங்கைக்கு அளித்த விஷயத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. கூறினார். 

சிபிஐ சார்பில் மதவெறி சக்திகளுக்கு எதிரான கண்டனக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தின் போது, டி.ராஜா நிருபர்களிடம் ,

இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்குவது தொடர் கதையாக உள்ளது. எல்லை மீறுவோர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இலங்கை அரசு வழக்குப்பதிவு செய்வது, சர்வதேச சட்டத்துக்கு எதிரானது. கச்சத்தீவு தாரை வார்த்தது தான் இதற்கு காரணம். இதனை மறு ஆய்வு செய்ய வேண்டும். \

எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ரூ.15 கோடி அபராதம் என்பது அட்டூழியம் ஆகும். இந்திய மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு அக்கறை எடுப்பதில்லை. தமிழக அரசு நிறைவேற்றுகிற தீர்மானங்களையும் மதிப்பதில்லை. திரிகோணமலையில் இந்திய, இலங்கை ராணுவ கூட்டுப்பயிற்சி முகாம் நடக்கவுள்ளது. இது எதற்காக நடக்கிறது என்று தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment