17 November 2015

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுவது ஆபத்தானது

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுவது ஆபத்தானது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மக்களை பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து மீட்கும் நோக்கிலேயே பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உரிய முறையில் பயன்படுத்தத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தி படையினரை கைது செய்து தண்டிப்பதுடன்இ தமிழீழ விடுதலைப் புலிகளை விடுதலை செய்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டமை தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.பிரான்ஸ் போன்ற நாடுகளில் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்றச் செயல் விசாரணைகளில் அவுஸ்திரேலிய வழக்குரைஞர் ஒருவரை ஈடுபடுத்துமாறு அண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசொப்பிடம் கோரியிருந்ததாகவும், அவ்வாறு கோருவதற்கு சுமந்திரனுக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ எவ்வித அதிகாரமும் கிடையாது எனவும் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அவ்வாறான அதிகாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கியதா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment