30 August 2016

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்­கு அடிப்­படைச் சம்­பளம் 620 ரூபா வேண்­டும்

தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரிக்கும் செயற்திட்­டத்தில் 620 ரூபா என்ற தொகையை அடி­ப்­படைச் சம்­ப­ள­மாக நாம் முன்­வைத்­துள்ளோம். அதி­லி­ருந்தே பேச்­சையும் ஆரம்­பிக்­கு­மாறு கோரு­கிறோம். மாறாக 500 ரூபா என்ற கம்­ப­னி­களின் தீர்­மா­னத்­துக்கு நாம் தயா­ரா­க­வில்லை என்று இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலைவர் முத்து சிவ­லிங்கம் தெரி­வித்­தார்.

அத்­துடன் இடைக்­கால கொடுப்­ப­னவு தொடர்பில் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்ள அனைத்து ஆவ­ணங்­க­ளையும் தமக்கு முத­லா­ளிமார் சம்­மே­ளனம் ஆதாரத்­துடன் கைய­ளித்­துள்­ள­தா­கவும் அவ­ர் மேலும் கூறி­னார்.

சாமி­மலை மீரி­யா­­கோட்டை விவ­சாய கிரா­மத்­திற்­கான 200 குடும்­பங்கள் பயன்­­பெறும் 13 கோடி ரூபா செலவில் அமைக்­கப்­பட்ட மின்­சாரம் வழங்கும் வைப­வத்தில் அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை நிகழ்த்­து­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.

இந் நிகழ்வில் இ.தொ.கா.வின் மத்­திய மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான கண­பதி கன­கராஜ், பி. சக்­திவேல், பிலிப்­குமார் அம்­ப­க­முவ பிர­­தேச சபையின் முன்னாள் தலைவர் வெள்ளையன் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்­ட­னர்.

இதன்­போது உரை நிகழ்த்­திய முத்து சிவ­லிங்கம் மேலும் தெரி­வித்­த­தா­வ­து

தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள பிரச்­சினை தொடர்பில் 8 ஆவது முறை­யா­கவும் பெருந்­தோட்ட கம்­ப­னி­க­ளுடன் பேச்­சு­வா­ர்த்தை இடம்­பெற்று வந்­துள்­ளது. இந்த நிலையில் நாம் முன்­வைத்­துள்ள சம்­பள உயர்­வுக்கு குறை­வான தொகையை கம்­ப­னிகள் பேச்­சு­வார்த்தை மேசைக்கு கொண்டு வந்தால் பேச்சு வார்த்­­தை­களை தொடர முடி­யாது முடி­வுக்கு வந்­த­து.

இந்த நிலையில் 17 மாதங்­க­ளாக இழுத்­த­டிக்­கப்­பட்­டுள்ள சம்­பள பேச்­சு­வார்த்­தையில் இ.தொ.கா. வின் சம்­பள உயர்வு கோரிக்­கை­க­ளுக்கு முத­லா­­ளிமார் சம்­மே­ளனம் இணக்கம் காட்­டாத கார­ணத்தால் இந் நிலை ஏற்­பட்­டுள்­ள­து.

அதே­வேளை தொழி­லா­ளர்­க­ளுக்கு 17 மாதங்­க­ளுக்­கான மீள் கொடுப்­ப­னவு வழங்­கப்­பமாட்­டாது என்று தெரி­விக்கும் முத­லா­ளிமார் சம்­மே­ளனம் தற்­பொ­­­ழுது வழங்­கப்­பட்­டுள்ள இடைக்­கால கொடுப்­ப­னவு மீள் கொடு­ப்­ப­னவை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஒப்­பந்த அடிப்­ப­டையில் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கின்­ற­து.

இன்னும் ஒரு காங்­கி­ரஸை உரு­வாக்க முடி­யாது. இருக்கும் காங்­கி­ரஸை எவ­ராலும் அழிக்­கவும் முடி­யாது. காங்­கி­ரஸின் எதிர்­காலம் நன்­றா­கவே இருக்­கின்­றது. அத்­தோடு சக்­தி­யா­கவும் இருக்­கின்­றது. இதனை இல­­குவில் அழித்து விட முடி­யா­து.

நாம் கனவு கண்டால் அது நன­வாக வேண்டும். விழுந்து கிடந்தால் மீண்டும் எழும்­பவும் வேண்டும். இ.தொ.கா. ஸ்தா­ப­னத்தை கட்டி­ய­மைக்க அமரர் சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மானின் ஜனன தினம் இன்று கொண்­டா­டப்­ப­டு­கின்­ற­து.

எந்­த­வொரு கட்சி பேதமும் வேற்­று­மை­யையும் காட்­டாது மக்­க­ளுக்­கென்ற சேவையை முன்­னெ­டுத்து வந்த மாபெரும் தலை­வ­ருக்கு மக்கள் அனை­வ­ரும் விள­க்­கேற்றி மரி­யாதை செலுத்த வேண்­டும்.

நியா­ய­மான சம்­பள உயர்வை இ.தொ.கா. பெற்றுத் தரும். இன்று ஆறு­முகன் தொண்­ட­மானை பலர் விமர்­சித்து வரு­கின்­றனர். ஆனால் நாம் இன்று தைரி­யத்­துடன் வாழ்­கின்றோம் என்றால் இதற்குக் காரணம் ஆறு­முகன் தான்.

2500 ரூபா ஒப்­­பந்த அடிப்­ப­டையில் பெறப்­பட்­ட­மை­யினால் சம்­பள உயர்­வுடன் கிடைக்கப் பெறும் மீள் கொடுப்­ப­ன­வுக்கு சிலர் ஆப்பு வைத்­துள்­ளனர். இது தொடர்­பாக நாம் கேட்ட பொழுது அது வேறு இது வேறு என காரணம் காட்­டு­கின்­றார்கள். ஆனால் அங்கே ஒப்­பந்த அடிப்­ப­டையில் இந்த இடைக்­கால கொடுப்­ப­னவு வழங்­கப்­பட்­ட­தாக முத­லா­ளிமார் சம்­மே­ளனம் ஆதா­ரத்­துடன் கைய­ளித்­துள்­ள­து என்றும் தெரி­வித்­தார்.

No comments:

Post a Comment