12 October 2016

மரணப் பொறியாகியுள்ள கூட்டு ஒப்பந்தம்

ஒரு காலத்தில் 10 இலட்­ச­மாக இருந்த மலை­யக தோட்டத் தொழி­லா­ளர்­களின் தொகை இன்று 2 இலட்சம் வரையில் குறை­வ­டைந்துள்­ளது. பெருந்­தோட்ட துறைக்கு வழங்­கப்­பட வேண்­டிய வரப்­பி­ர­சா­தங்கள் வழங்­கப்­ப­டா­மையே இந்­நி­லைக்கு காரணம். எனவே தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை தீர்­மா­னிக்கும் கூட்டு ஒப்­பந்தம் மர­ணப்­பொ­றி­யா­கவே அமைந்­துள்­ளது என்று சிவில் அமைப்­புக்கள் ஒன்­றி­ணைந்து வில­யு­றுத்­தின. 
தற்­போது அமைச்சர் மனோ கணே­சனின் அமைச்­சுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள வரப்­பி­ர­சா­தங்கள் போதாது என்­பதால் தாம் பத­வியை துறக்­கப்­போ­வ­தாக தெரி­வித்­துள்ளார். ஆனால் அவர்­களை ஆட்­சியில் அமர்த்­திய மலை­யக மக்­களின் 1000 ரூபாய் சம்­பள கோரிக்­கையை வலுப்­ப­டுத்தும் வகையில் அமைசர் மனோ கணேசன்,திகாம்­பரம்,இரா­ஜாங்க அமைச்சர் இரா­தா­கி­ருஸ்னண் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும் குறித்த அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் சுட்­டிக்­காட்­டினர்.
கொழும்பு சன சமூக நிலை­யத்தில் நவ சம­ச­மாஜ கட்சி,அர­சியல் கைதி­களை விடு­விப்­ப­தற்­கான இயக்கம், சுகா­தார சேவைகள் சங்கம், சோஷ­லிச ஐக்­கிய முன்­னணி உள்­ளிட்ட அமைப்­புக்கள் ஒன்­றி­ணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவ்­வ­மைப்பின் பிர­தி­நி­திகள் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர்.
 சட்­டத்­த­ரணி ஈ.தம்­பையா தெரி­விக்­கையில்,
எதிர்­வரும் 14 ஆம் திகதி கூட்டு ஒப்­பந்தம் கைசாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது. முன்னர் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 சம்­ப­ளத்தை பெற்­றுக்­கொ­டுப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்­தது. மறு­புறம் தழிழ் முற் போக்கு கூட்­டணி 1000 ரூபாய் சம்பள் அதி­க­ரிப்பு கோரி தல­வாக்­க­லையில் சத்­தி­யாக்­கி­ரக போராட்டம் செய்­தனர்.
அதனால் இது யாரால் முன்­வைக்­கப்­பட்­டது எதற்­காக முன்­வைக்­கப்­பட்­டது என்­பது தொடர்பில் ஆரா­யாமல் சக­லரும் ஏற்­றுக்­கொண்ட விடயம் என்றே கூற­வேண்டும். ஆனால் இந்த கோரிக்­கையை நிறை­வேற்ற எவரும் முன்­வ­ர­வில்லை. சக­லரும் பின்­வாங்­கி­விட்­டார்கள் என்றே கூற வேண்டும். தற்­போது அமைச்சர் நவீன் திஸா­நா­யக்­கவும், ஜோன் சென­வி­ரட்­னவும் 730 பெற்­றுக்­கொண்டு சேவைக்கு திரும்­பு­மாறு கூறி­யுள்­ளனர். அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த காலத்தில் 820 ரூபாய் பெற்­றுக்­கொ­டுப்­ப­தா­கவும் அதற்கு தோட்ட கம்­ப­னிகள் இணக்கம் தெரி­வித்­துள்­ள­தா­கவும் கூறப்­பட்­டது இன்று 730 பெற்­றுக்­கொண்டு சேவைக்கு திரும்ப வேண்டும் என்று கூறு­கின்­றனர்.
அதனால் இன்று இவ்­வாறு பல அமைப்­புக்கள் ஒன்­றி­ணைந்து கூட்டு ஒப்­பந்­தத்­திற்கு எதிர்ப்பு வெளி­யிட வேண்­டி­யுள்­ளது. எவ்­வா­றா­யினும் தற்­போதே கூட்டு ஒப்­பந்தம் கைசாத்­தா­கி­யி­ருக்­கலாம் என்ற சந்­தே­கமும் எம்முல் உள்­ளது. 730 சம்­ப­ளத்­திற்கு 3 நாட்கள் மட்­டுமே வேலை வழங்­கப்­படும் என்று கம்­ப­ப­னிகள் தெரி­வித்­துள்­ளன. கூட்டு ஒப்­பந்­தத்தின் பிர­காரம் 6 நாடகள் வேலை வழங்க வேண்­டி­யது கட்­டா­ய­மாகும். வரு­டத்­திற்கு 300 நாட்கள் வேலை வழங்­கப்­பட வேண்டும். அவ்­வா­றாயின் தற்­போது கைசாத்­தி­டப்­ப­ட­வுள்ள கூட்டு ஒப்­பந்­தத்தில் தொழி­லாளர் உரி­மையை பறிக்­கப்­ப­ட­போ­கின்­றது.
இது ஒரு பாரா­தூ­ர­மான பிரச்­சி­னை­யாக உள்­ள­போது கம்­ப­னிகள் நட்­டத்தில் இயங்­கு­வ­த­மாக கூறி சமா­ளிக்­கின்­றன. இது உண்­மைக்கு புறம்­பான விட­ய­மாகும். 2 கம்­ப­னி­களை தவிர அனைத்து கம்­ப­னி­களும் லாப­மீட்­டு­வ­தா­கவே உள்­ளன. அத்­துடன் இலங்­கையி்ன் பெருந்­தோட்ட உற்­பத்­தி­க­ளுக்­கான கேள்வி வெளி­நாட்டு சந்­தையில் குறை­வ­டைந்­துள்­ள­தாக கூறு­கின்­றனர்.
அதற்கு தொழி­லா­ளர்கள் பொறுப்­பாக முடி­யாது. தற்­போது பொறுப்­பேற்­றுள்ள கம்­ப­னி­களே பொறுப்பு கூற வேண்டும். வெளி­நாட்டு சந்­தை­யி­லி­ருந்த இலங்கை உற்­பத்­தி­க­ளுக்­கான கேள்­வியை கம்­ப­னி­களே அழித்­தன என்­பதில் மாற்று நிலைப்­பாடு இல்லை என்றார்.
  இவ் ஊட­க­வி­ய­லாளர் சந்த்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய சோஷ­லிச ஐக்­கிய முன்­னணி கட்­சியின் தலைவர் சிறி­துங்க ஜய­சூ­ரிய தெரிக்­கையில்,
தொண்­ட­மான மஹிந்­தவின் பக்­க­மாக அமர்ந்து தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபாய் பெற்­றுக்­கொ­டுப்­ப­தாக கூறி­ய­போதும் மக்கள் அதனை ஏற்­காது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வாக்­கு­று­தியை நம்பி அவர்­களை ஆட்­சியில் அமர்த்­தினர். ஆனால் இன்று மக்­க­ளி­டத்தில் விதைக்­கப்­பட்ட நம்­பிக்­கையின் பிர­காரம் பிர­தமர் நடந்து கொள்­ள­வில்லை.
மறு­புறம் தோட்ட கம்­ப­னி­களும் நஷ்டம் ஈட்­டு­வ­தாக கூறிக்­கொண்டு தொழி­லாளர் சம்­ப­ளத்தை அதி­க­ரிக்க தயங்­கு­கின்­றது. கம்­ப­னிகள் உண்­மை­யா­கவே நஷ்டம் ஈட்­டு­மாயின் அவற்கை கைவி­டாது ஏன் பற்­றிப்­பி­டித்­துக்­கொண்­டுள்­ளன?. அவர்கள் லாபம் ஈட்­டு­வ­தா­லேயே இது­வ­ரை­யிலும் பற்­றிக்­கொண்­டுள்­ளனர். மக்­களை மட்­டு­மட்­டு­மன்றி நஷ்டம் என்ற பேரில் தோட்ட கம்­ப­ப­னிகள் அர­சாங்­கத்­தி­னையும் ஏமாற்­று­கின்­றன.
இவ்­வா­றான நிலையில் மலை­யக மக்­களின் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளாக உள்ள அமைச்சர் மனோ கணேசன், இரா­தா­கி­ருஸ்னண்,திகாம்­பரம் ஆகியோர் அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் அவர்­களே 1000 ரூபாய் சம்­பள அதி­க­ரிப்பை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனை செய்ய தவ­றி­யுள்­ளனர். அதற்கு மாறாக அமைச்சர் மனோ கணே­சனின் அமைச்­சுக்­கான வரப்­பி­ர­சா­தங்கள் குறை­வாக வழங்­கப்­பட்­டுள்­ளதால் அவர் பதவி விலக போவ­தாக கூறிக்­கொண்­டுள்ளார். அவர் முதலில் மலை­யக மக்கள் குறித்து கவனம் கொள்ள வேண்டும். 1000 ரூபாய் பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறு அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் அதற்­காக அவர்கள் பதவி விலக வேண்டும் அதனை விடுத்து அவரின் அமைச்சு குறித்து மாத்­திரம் கவனம் செலுத்­து­வது நியா­ய­மா­ன­தல்ல என்றார்.
   அருட்­தந்தை சக்­திவேல் தெரி­விக்­கையில்,
கூட்டு ஒப்­பந்தம் என்­பது மலை­யக மக்­களை இல்­லாது செய்­கின்ற மர­ணப்­பொ­றி­யாகும். கடந்த காலங்­களில் 10 இலட்­ச­மாக இருந்த தோட்ட தொழி­லாளர் தொகை படிப்­ப­டி­யாக குறை­வ­டைந்­துள்­ளது. அதற்கு கூட்டு ஒப்­பந்­தமே பிர­தான காரணம். மலை­யக மக்கள் காலம் கால­மாக செய்­து­வரும் இந்த தொழி­லுக்­கான வரப்­பி­ர­சா­தங்­களை உரிய தரப்­பினர் பெற்­றுக்­கொ­டுக்­காத கார­ணத்­தி­னா­லேயே குறித்த தொழிலை விடுத்து செல்லும் நிலைப்­பாட்­டுக்கு மக்கள் தள்­ளப்­பட்­டனர்.
தற்­போது அவர்­க­ளுக்கு 730 ரூபாய் சம்­பளம் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் அவர்கள் 1000 ரூபாய் கோருகின்றனர். அதுவும் அவர்களுக்கு போதுமான சம்பளம் அல்ல. இங்கு மக்களின் உழைப்பிற்கான சம்பளத்தினையே வழங்கவேண்டும். அது கவர்ச்சியான சம்பளமாக அமையும் பட்சத்தில் மாத்திரமே தொழிலாளர்களும் தொழில்துறையும் பாதுகாக்கப்படும்.
அதற்கு மாறாக முதலாளித்துவத்துக்கு ஆட்பட்டு மலையக மக்கள் அடிமைகள் என்ற கோணத்தில் பார்க்கப்பட்டு சம்பளம் வழங்கப்பட கூடாது. தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதார முறைமைகளில் முற்றாக மாற்றம் செய்யவுள்ளது அதற்காக தோட்ட தொழிலை ஒழித்து அங்குள்ள மக்களை விரட்டியடிக்கும் முயற்சியே அவர்களின் சம்பள குறைப்பாகும் அதனாலேயே கூட்டு ஒப்பந்தத்தினை மரணப்பொறி என்று குறிப்பிடுகின்றோம் என்றார்.
நன்றி- வீரகேசரி

No comments:

Post a Comment