நாடு முழுவதிலுமுள்ள வைத்தியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். இன்று காலை 8.00 மணி முதல் 24 மணித்தியாலங்கள் மேற்கொள்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தது. அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் இயங்கும் என தெரிவித்துள்ள வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மகளிர் வைத்தியசாலை, சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, சிறுநீரக பிரிவு ஆகிய வழமை போலவே இயங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று இடம்பெற்ற அடையாள வேலை நிறுத்தத்தின் பின்னர் சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக எதிர்வரும் செவ்வாய்கிழமை கூடும் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் நவீந்திர டி சொய்சா தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் இந்த புதிய வரவ செலவுத் திட்டத்தில் இலவச கல்வி, இலவச சுகாதார சேவை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாதிருப்பதாகவும், இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தபோதும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தினால் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்க வேண்டி ஏற்பட்டதாக கூறினார். புதிய வரவ செலவுத் திட்டத்தில் மக்களுக்குரிய நிவாரணங்கள் குறைக்கப்பட்டு மதுபான நிறுவனங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment