10 May 2017

உறுதியான நோக்கமுள்ள மார்க்சிசவாதியான ஒரு நண்பனுக்கு பாராட்டு

சாதாரண நிகழ்வுகளில் எனது நீண்டகால நட்பும் மற்றும் சகோதரத்துவமும் சுகு என அழைக்கப்படும் சிறிதரனிடத்தில் எனக்கு உள்ளது, மற்றும் அவரது பல சகாக்களுக்கு குறிப்பாக சுபத்திரன் அல்லது றொபேட்டுக்கு அது அசாதரணமான ஒன்றாக இருந்திருக்கும். இதில் எங்களுக்கு தொழில் சார்பான பயிற்சி மற்றும் உள்நாட்டு வசதியுடன் கூடிய வெற்றிகரமான வேலை என்பன திட்மிடப்பட்டிருந்தன, உண்மையில் முக்கியமான விடயங்களைப்பற்றி சிந்திப்பது அநேகமாக நிறுத்தப்பட்டிருந்தது. சாதாரணமாக அது சரியானதாகத்தான் இருந்தது. ஆனால் இந்த நபர்களுக்கு தமிழ் தேசியத்தின் ஹீரோக்களாக வேண்டும் என்கிற மற்றவர்களைப் பற்றிய ஒரு தூண்டுதல் ஏற்பட்டபோது அவர்கள் அதற்காக குரல் கொடுத்ததோடு துரோகிகளாக கருதி சித்திரவதை செய்யப்படுவதற்கும் மற்றும் கொலை செய்யப்படுவதற்கும் மறைமுகமான அங்கீகாரத்தை வழங்கினார்கள், முற்றிலும் துரதிருஷ்டமான நிலையிலிருந்த சாதாரண மக்களைப் பற்றி சிந்திக்கவும் மற்றும் உணரவும் செய்தவர்களால் அவர்கள் ஒருபோதும் விரும்பியிராத யுத்தத்திற்கு தொடர்ச்சியாகத் தள்ளப்பட்டார்கள்.
சுகு தேர்ந்தெடுத்த பாதையை பின்பற்றிய நபர்களுக்கு, வாழ்க்கை என்பது முழுவதும் வலிகள் மிகுந்த சவால்களாகத்தான் இருந்தது, அது எங்களில் பெரும்பாலானவர்களை பெரிதும் பாதித்திருக்க வேண்டும். சுகுவின் அரசியல் வாழ்க்கை 1980 களின் தொழிலாளர்களின் அடிப்படைக் கோரிக்கைக்காக மேற்கொள்ளப்பட்ட பொது வேலை நிறுத்தத்தின்போது ஜே.ஆரின் அரசாங்கம் ஜே.எஸ்.எஸ் குண்டர்களை பயன்படுத்தி அதைக் கொடிய முறையில் ஒடுக்கிய காலத்துக்கு பின்னோக்கிப் போகிறது, ஜனாதிபதி ஜே.ஆர் அந்த குண்டர்களுக்கு மே 24ல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டார். 1983 ன் இனக் கலவரத்துக்கு திரும்பவும் இதே குண்டர்கள்தான் பயன்படுத்தப் பட்டார்கள். ஒரு ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் இயக்கம் பிஷப் லக்ஸ்மன் விக்ரமசிங்கா போன்ற ஒரு முன்னணி பிரபலத்துக்கு ஆதரவு வழங்கியது ஒருவேளை இதுதான் இறுதியான ஒன்றாக இருக்கும். தமிழ் தேசியவாதிகளுக்கு அது ஒரு சோதனையான காலமாகவும் இருந்தது. எனது சகாவான சிறீதரன் அப்போது யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் ஒரு விரிவுரையாளராக இருந்தார், அவர் தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு ஆதரவு தெரிவிக்கும்படி ரி.யு.எல்.எப் தலைமையிடம் கேட்பதற்காக ஒரு தூதுக்குழுவுடன் அவர்களைக் காணச் சென்றார். அவர்கள் அதைத் தட்டிக் கழித்தார்கள் மற்றும் திரு. சிவசிதம்பரம் அது சிங்களவர்கள் பிரச்சினையாக உள்ளது தமிழர்களைப்பற்றி அக்கறை காட்டவில்லை என அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பிரதானமான எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு பொறுப்பற்றதும் மற்றும் உணர்ச்சியற்றதுமான பதிலை அவர்கள் வழங்கினார்கள். அதைத் தொடர்ந்து பின்னர் என்ன நடந்தது, அந்த வரலாற்று வஞ்சனை மற்றும் முட்டாள்தனமான நிலைப்பாடு என்பனவற்றைப் பற்றி நான் விரிவாக விளக்க வேண்டியதில்லை, ஜே.ஆர் அதை வழங்குவதற்காகக் காத்திருக்கிறேன்.
சுகுவை போன்ற ஈபிஆர்எல்எப் இனது ஆரம்பகால நண்பர்கள், ஒரு மக்கள் இயக்கத்தை ஆரம்பிப்பதற்காக அறிவு பூர்வமாகவும் மற்றும் உணர்வு பூர்வமாகவும் போராடினார்கள், அது சர்வதேசியம் மற்றும் மக்களின் நலன்களுக்காக கடுமையாக அர்ப்பணிக்கப்பட்டதும் மற்றும்  எல்.ரீ.ரீ.ஈ யினை முன்னணிக்கு கொண்டுவந்த தமிழீழ தேசியவாதம் என்கிற உயர்ந்த அலைக்கு எதிரானதாகவும் இருந்தது. பாலகுமாரின் ஈரோஸ் அமைப்பின் ஒரு பகுதி முதல் பிரேமச்சந்திரன் வரையான அவருடன் இருந்தவர்களில் அநேகர் ,வெகு சமீபத்தில் முள்ளிவாய்க்கால் பயங்கரத்துக்குள் தமிழ் தேசியவாதத்துடன் மக்களையும் இழுத்துக்கொண்டு ஏன் மூழ்கினார்கள் என்பதைப் புரிந்துகொள்வது கடினமான ஒன்றல்ல.
1980 களில் ஈபிஆர்எல்எப் இற்கு முக்கியத்துவம் வழங்கியவர்களில் நான் மேற்கோள் காட்ட விரும்புவது என் பத்மநாதன் அவர்களை, ஒரு முன்னணி அரச ஊழியர் அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின்(பி.ரி.ஏ) கீழ் 1983 முதல் 1987 வரை சிறைவாசம் அனுபவித்தவர். அவர் மற்றைய பி.ரி.ஏ தடுப்புக்காவல் கைதிகளுக்கு அவர்களது வழக்ககுகளை தயாரிக்க உதவினார். வவுனியாவில் சுவரொட்டிகளை ஒட்டியதாக கைது செய்யப்பட்ட ஈபிஆர்எல்எப் அங்கத்தவர் மீதான குற்றச்சாட்டுகளை வாசித்தபோது அவர் ஆச்சரியமடைந்தார், தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து அனைவருக்கும் சமத்துவத்துவத்துக்கான உத்தரவாதத்தை வழங்கும் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒற்றுமையான போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. முரண்பாடாக பத்மநாதன் ஒரு பிரிவினைவாத குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார், தேசிய ஒற்றுமைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுக்காக கௌரவிக்கப்பட வேண்டிய மனிதர் அவர்.
இன்று நாங்கள் சுகுவை அவரது புத்தக வெளியீட்டின்போது பாராட்டுகிறோம், 1980 களில் வரலாற்று சிறப்பான தொழிலாளர் இயக்கத்தின் எஞ்சியவர்களின் சார்பாக இறுதி நிலைப்பாட்டை எடுப்பதற்கு சொந்தமாக இருந்தவர் என் நாங்கள் சொல்லலாம் அந்த இயக்கத்தை நசுக்குவதற்கு பயன்படுத்திய அதே முறைகள் எங்கள் தலைவர்கள் தூங்கும்போது தமிழர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டது. பல தசாப்தங்களாக அக்கிரமங்கள் மற்றும் கொலைகள் ஊடாக கடந்து வந்தபோதிலும் கறைபடியாத குணசித்திரத்தை கொண்ட அரிய உயிர்களின் மத்தியில் சுகுவும் ஒருவர். அதற்கு அவருக்கு உதவியது என்னவென்றால் அவரது கூர்மையான அறிவு, படிப்பு மூலமாக அதை தொடர்ந்து புதுப்பித்தது, உலகத்துடன் இடையீடு செய்தது, மற்றும் துன்பப் படுபவர்களுக்காக இரக்கம் காட்டியது என்பனவே. இது ஒரு வகையான அறிவுத் தரம், வேட்டையாடுவதையே அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பான கல்வி நிறுவனங்களில் அதற்கு இடமில்லை. சுகுவிடம் வேரூன்றி உள்ள அறிவார்ந்த மனதில் பெரிய பிரபஞ்ச இடைவெளி மற்றும் நேரம் பரவி உள்ளன, மற்றும் வயதுகளின் அறிவுக்கு ஏற்றபடி நம்பிக்கை மற்றும் மீள் உத்தரவாதம் என்பன கிடைக்கப் பெறுகின்றன.
“மானிடத்தை புனிதமாக்கும் புதிய தலைமுறைகள்” என்கிற தலைப்பில் அவருடைய கட்டுரைகளின் தொகுப்பு மானிடத்தின் விடிவுக்கான போராட்டத்தில் இறந்தவர்களுக்கும் மற்றும் காணாமற்போனவர்களுக்கும் அர்ப்பணிப்பு செய்யப்பட்டுள்ளது, இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கான பாரதியின் அர்ப்பணிப்பை மேற்கோள் காட்டுகிறார் - (அவர்களுடையதாக இருக்கலாம்) கனவு நனவானது என்று. பாரதி மற்றும் தாகூர் ஆகிய இருவரது வரிகளையும் அவர் மேற்கோள் காட்டுகிறார் : “எங்கே மனது அச்சமின்றி இருக்கிறதோ…. எங்கே தெளிவான காரணங்களின் பிரவாகம் தனது பாதையை இழக்காமல் இருக்கிறதோ … அதுதான் சுதந்திரத்தின் சொர்க்கம், எனது தந்தை, எனது நாடு விழிப்பாக இருக்கட்டும்”, இவைகள்தான் மனிதனின் இதயம் மற்றும் அவனது அபிலாஷைகளுக்கான குறிகாட்டி”.
அவரது வழிகாட்டிகள் இருவரைப் போலவே சுகுவும் உறுதியான ஒரு சர்வதேசியவாதி. 2003ல் அமெரிக்கா - பிரித்தானியா இணைந்து ஈராக் மீது ஆக்கிரமிப்பு நடத்தியது தொடர்பான அவரது கட்டுரை மற்றும் அரபு வசந்தத்தில் அவர் அடைந்த மகிழ்ச்சி மற்றும் அதன் பண்பு நயத்தில் அவர் காட்டிய பதற்றம் என்பனவற்றின் ஊடாக அது நன்கு வெளியாகிறது. அவரது யதார்த்த உணர்வுகள் மற்றும் அவர் முகங்கொடுத்த ஏமாற்றங்கள் என்பனவற்றின் ஊடாக அவர்  காரணங்களின் வெளிச்சத்தில் உலகம் வேலை செய்யும் வழியில் அவற்றை காண முயற்சிக்கிறார் மற்றும் அவரது  உணர்வுகள் தனித்துவமானவகையில் கட்டுப்படுத்தப் படுகின்றன. விடுதலையின் ஒழுங்கை தேடும் வழியில் தனது வாழ்வை அர்ப்பணித்த ஒரு மனிதர் என்கிற வகையில் அவரது வார்த்தைகளுக்கு ஒரு கடுமையான வளையம் உள்ளது, சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களை எதிர்பாராத நேரங்களில் தாக்கும் கொலைக் கலாச்சாரத்தை, மற்றும் கடத்தப்பட்ட சிறுவர்கள் யுத்தங்களில் போராடும்போது உயரடுக்கினர் அதிலிருந்து தப்பி ஓடுவது போன்றவற்றை விபரிக்கும்போது பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “நாகரீக உலகத்தில் வாக்குரிமையையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்கு இத்தகைய அருவருப்பான நடைமுறைகளை ஏற்றுக் கொண்டவர்கள் முற்றிலும் பெறுமதியற்ற மனிதர்கள்” என்று.
தேசியவாதம் மற்றும் சர்வதேசியவாதம் என்பனவற்றுக்கு இடையிலான முரண்பாடு தமிழ் தேசியவாதச் சடங்குகள் எவ்வாறு தமிழர்களை ஒரு முட்டுச் சந்துக்குள் முடக்கிவிட்டது என்பதை என்பதை விளக்குகிறது. அது அறிவுஜீவிகள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்கும் அதிகாரம் மற்றும் பதவி என்பனவற்றுக்கான ஒரு சடங்கு. பேராசிரியர்கள் இந்திய மற்றும் ஸ்ரீலங்கா படைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்துக்கு தமிழ் மக்கள் தமது ஆதரவை வழங்கியதாக பகிரங்கமாகச் சொல்வதை ஒருவர் கேட்கிறார். இது யுத்தத்தை ஒரு விளையாட்டு பொருளாக கருதும் உயரடுக்கினரின் சந்தர்ப்ப வாதத்தால் துன்பப்படுவதற்கு தள்ளிவிடப்பட்ட தவறான வழிநடத்தப்பட்ட மக்களைப் பற்றிய முற்றிலும் தவறான ஒரு விளக்கம். யுத்தத்தில் வீரத்துக்கோ அல்லது காதலுக்கோ இடமில்லை.
இன்று நாம், யுத்தத்தை எதிர்த்து போராடும் அரசாங்கங்கள், எதிர்ப்பவர்கள் தரப்பிலுள்ள பொதுமக்களை பாதுகாப்பதற்கு கடமைப்பட்டுள்ளது, மற்றும் நிராயுதபாணியான போராளிகளுக்கு ஒரு பொதுமகனுக்கு உள்ள உரிமைகள் உள்ளன என்பதை எங்களுக்கு வழங்கப்பட்டதாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இவை ஜனாதிபதி லின்கொலினின் 1863ன் லைபர் குறியீட்டில் தொடங்கி 1899 மற்றும் 1907 ஹேக் மாநாடுகளில் சர்வதேச ரீதியாகப் பின்பற்றப்பட்டு வரும் சமீபத்தைய முன்னேற்றங்கள். ஒரு யுத்தத்துக்கான விதிமுறைகள் எவை என்பது 1774ல் லோட் மான்ஸ்பீல்ட்டின் நிதிமன்ற தீர்ப்பு ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ளது:
“அரசியலமைப்பின்படி சரணடைதலை ஏற்கவோ அல்லது மறுக்கவோ உள்ள அதிகாரம் அரசருக்கே உள்ளது.” - இங்கு அவர் வெற்றி கொண்ட மக்களின் உயிர்களைப் பொறுத்தவரை ஒரு ஏற்றுக்கொள்ளும் உரிமையை பெறுகிறார். சரணடையும் உரிமையை மன்னர் வழங்க மறுத்தால், அதை அவரால் செய்ய முடியும், சரணடைவதற்கு விதிக்கப்பட்டவர்களின் உயிர்களை அவரால் எடுக்க முடியும், அவர் குடிமக்களை வாளுக்கு பலி கொடுத்தால் அவர்களுடைய நிலங்கள் அனைத்தும் மன்னருக்குச் சொந்தமாகும். “அவர் சரியான வழியில் சிந்தித்தால் அவர் குடியிருப்பாளர்களை தனது பாதுகாப்பில எடுத்து அவர்களின் சொத்துக்களை அவர்களுக்கே வழங்குவதற்கான நியமங்களை நிறுவ முடியும்”.
இங்கு வெற்றி கொள்ளப்பட்ட மக்களுக்கு சட்டப் பாதுகாப்பு இல்லை. பொதுவாக அவர்கள் ஒரு ஆளுனர் அல்லது இராணுவத் தளபதியின் விருப்பத்தின்படி வாழவேண்டியிருக்கும். ரோமானிய நேர்மறையான அல்லது தன்னிச்சையான சட்டத்தின்படி (ஐயுஸ் ஜென்டியம்) ஒரு சலுகையாக தோற்கடிக்கப்பட்ட மக்கள் வாளுக்கு இரையாவதை தவிர்த்து அடிமைகளாக வாழ முடியும்.
இன்று நாங்கள் எங்கள் நிலங்களைத் திரும்பக் கோருகிறோம் மற்றும் வெற்றிபெற்ற பக்கத்தில் உள்ள படை வீரர்களின் தவறான நடத்தைகளுக்காக விசாரணைகளைக் கோருகிறோம். தேசியவாதிகளுக்கு இந்த கோரிக்கைகளை முன் வைப்பதற்கான தார்மீக உரிமை கிடையாது மற்றும் அவர்களது வெளிப்படையான பாசாங்குத்தனமாகவே அது இருக்கும். தேசியவாதம் என்பது அடிப்படையில் சிந்தப்பட்ட இரத்தமாகவே கருதப்படும். சுகுவை போன்ற சர்வதேசியவாதிகள் தார்மீக கட்டுப்பாடுடன் இருப்பதால் இந்தக் கோரிக்கைகளை முன்வைக்கும் உரிமை உள்ளது, கோரிக்கைகள் என்றால் அர்ப்பணிப்பான சர்வதேசவாதிகளால் சட்டப்படி இயற்றப்பட்டவையாகும். சிங்களவர்கள் இதை பெருமளவில் ஏற்றுக்கொள்வதானால் நாங்கள் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்று கூட யுத்தம் தொடர்பான பழைய சட்டங்கள் தற்போது தங்கள் நிழலையையே வெளிப்படுத்துகின்றன இதற்கு உதாரணமாக ஈராக், சிரியா மற்றும் பலஸ்தீன மக்களின் கதியைக் கூறலாம்.
1983ம் ஆண்டு ஜெயவர்தனா அரசாங்கம் தமிழ் பொதுமக்களுக்கு எதிராக போரைப் பிரகடனப் படுத்தியது என்று சொல்லலாம். படுகொலைகள் தொடர்ந்தன. பின்னர் சுகு சுட்டிக் காட்டுவதைப் போல இந்தக் கட்டத்தின் முடிவில் ஏற்பட்ட 1987ம் ஆண்டின் இந்தோ - லங்கா ஒப்பந்தம் எல்லா போராளிக் குழுக்களினதும்  கூட்டு முயற்சிக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளது என்று சொல்வதை யாராலும் மறுக்க முடியாது. எல்.ரீ.ரீ.ஈ யினால் 1986ன் நடுப்பகுதியில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட ஏகபோகம் பின்னடைவுக்கே வழி வகுத்தது, வடமராட்சி மற்றும் கொக்கட்டிச்சோலையில் அது இந்தியாவின் தலையீட்டினால் சரியாக்கப்பட்டது. இந்தியா இந்த உடன்படிக்கை மூலமாக தமிழ் மக்களை அவமானத்தில் இருந்து காப்பாற்றியது என்றும் மற்றும் இந்த உடன்படிக்கையின் கீழ் தீர்வு ஏற்படுவதற்கு எல்லாக் குழுக்களினதும் ஒருங்கிணைந்த கடப்பாடு காரணம் என்று சொன்னால் எல்.ரீ.ரீ.ஈ யினால் அதை ஒப்புக்கொள்ள முடியாது அதன் வீரமான தோற்றம் சிதைந்து கொண்டிருந்தது. அடுத்து வந்த நான்கு போர்களும் தேவையற்றவை.
1988ல் அதிகாரப் பகிர்வு வந்தபோது தமிழர்கள் போராடி அதிக உயிர்களை இழந்திருந்தார்கள், அதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. எல்.ரீ.ரீ.ஈ அந்த உடன்படிக்கை ஒரு காட்டிக்கொடுப்பு என்று சொன்னது, பின்னர் இந்தியாவுடன் ஒரு போரை ஆரம்பித்தது மற்றும் தொடர்ச்சியான மூன்று வருடங்களில் சுகு சுட்டிக்காட்டுவதைப் போல மூன்று முன்னணி பங்களிப்பாளர்களான, திரு.ஏ.அமிர்தலிங்கம்;, ஈபிஆர்எல்எப் தலைவர் பத்மநாபா மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரை கொலை செய்தது. வடக்கு - கிழக்கு மாகாணசபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈ.என்.டி.எல்.எப் என்பனவற்றுடன் இணைந்து கலைக்கப்படாமல் கொண்டு நடத்துவதற்கு ஈபிஆர்எல்எப் விரும்பியது என்று சுகு நியாயப்படுத்துகிறார். 1990ல் அது எல்.ரீ.ரீ.ஈ யின் வேண்டுகோளின்படி ஜனாதிபதி பிரேமதாஸாவால் கலைக்கப்பட்டது. வடக்கு - கிழக்கு மாகாணசபையை எல்.ரீ.ரீ.ஈ நடத்துவதற்கு பிரேமதாஸ அனுமதித்தார், அதேவேளை அதன் கொலைகளுக்கும் சிறை வைப்புகளுக்கும் ஒரு முறையான ஏற்பாடு இன்றி ஒத்துழைப்பு வழங்கினால் அது இருதரப்புக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கும்
கலாநிதி.ராஜன் ஹ_ல்
நன்றி- தேனீ

No comments:

Post a Comment