நாட்டுக்கு நல்லது எது என்பதை முடிவு செய்வது அஸ்கிரிய பீட மகாநாயக்கர்கள் என்றால் அல்லது வேறு வகையில் சொன்னால் நாட்டைப் பற்றிய முடிவுகளை மக்களுக்காக மேற்கொள்வதற்காக ஜனநாயக முறைப்படி மக்களால் தோந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வைத்திருப்பது நியாயமில்லை. அஸ்கிரிய பீடத்தை சேர்ந்த பௌத்த பிக்குகளுக்கு ஏற்கனவே மக்களுக்கு எது சிறந்தது என்று மிக நன்றாகவே தெரியும். எனவே இந்த நியாயப்படி ஸ்ரீலங்கா அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு நாட்டின் ஆட்சியை அஸ்கிரியபீட மகாநாயக்கர்களிடம் வழங்கலாம்.
பிரஜைகள் நவீன ஜனநாயக அரசை இயக்குகிறார்கள். அதன் அனைத்து உயர்வுகள் மற்றும் தாழ்வுகள் மற்றும் சிக்கல்கள் ஆகிய எல்லாவற்றிலும் குடிமக்கள் ஆட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக பங்குபற்றி உதவுகிறார்கள். ஜனநாயக அமைப்பு குடிமக்களை ஆட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக பங்குபற்ற அனுமதித்த போதிலும், ஆட்சியமைப்பில் பங்குபற்றுவதா அல்லது இல்லையா என்கிற முடிவை எடுக்கவேண்டியது குடிமக்களின் விருப்பத்தைப் பொறுத்தது. அதேவேளை மக்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார அறியாமை அவர்களை, நாட்டின் குடிமக்களைப் பிரதிநிதிப் படுத்துவதற்கும் மற்றும் சரியான முடிவை எடுப்பதற்கும் தகுதியற்ற பிரதிநிதிகளை தெரிவு செய்ய வழிவகுத்து விடுகிறது, அத்துடன் நவீன தாராளவாத கொள்கைகளால் உருவாக்கப்பட்ட மேலோட்ட அடையாளங்கள் ஜனநாயகத்தில் இன - மத பெரும்பான்மையை சக்தி வாய்ந்ததாக ஆக்குவதில் பிரதான பாத்திரத்தை வகிக்கின்றன. அதேவேளை ஜனநாயகம் அதன் சொந்த கட்டமைப்பில் பலவீனமாக உள்ளது என்பதும் வெளிப்படையான உண்மை, பிரஜைகள் அதனைக் கையாண்டு ஜனநாயகத்தின் எல்லைகளை விரிவுபடுத்த இயலும். குடிமக்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுக்கு இடையே உள்ள உறவு, நாட்டின் இறையாண்மையை செயல்படுத்த உதவும் சட்ட அமைப்பை கண்டறியக் கூடியதாக உள்ளது.
ஜோர்ஜியோ அகாம்பென்னின் கூற்றுப்படி இறையாண்மை ஒரு முரண்பாடானது அது நாட்டின் சட்ட அமைப்புக்கு வெளியே விளையாடும் அதேசமயம், சட்ட அமைப்புக்கு வெளியே எதுவும் இல்லை என்றும் அறிவிக்கிறது (அகாம்பென், ஜி, (1998), ஹோமோ சேஸர்: இறையாண்மை அதிகாரம் மற்றும் வெற்று வாழ்க்கை, ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழக பதிப்பகம்). இதன்படி நிகழ்வில் உள்ள சிக்கல் கவனமாகக் கையாளப்பட வேண்டும் இல்லையென்றால் அது நயவஞ்சகமான அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழி வகுக்கும்.
அதன் முரண்பாடான தன்மையின் காரணமாக இறையாண்மையில் அநேக வெளிக் காரணிகள் செல்வாக்குச் செலுத்துவதால் அது அநீதியான ஒரு சட்ட அமைப்பை நியாயமான மற்றும் நீதியானது என்று வழங்க முடியும். ஸ்ரீலங்கா அரசியலமைப்பின் 9ம் சட்ட பிரிவின்படி ‘ ஸ்ரீலங்கா குடியரசு பௌத்த மதத்துக்கு முதன்மையான இடத்தைக் கொடுக்கிறது, அதன்படி புத்த சாசனத்தை பாதுகாப்பதும் மற்றும் வளர்ப்பதும் அரசின் கடமையாகும்’, அதேவேளை எல்லா மதங்களுக்கும் அவற்றின் உரிமைகள் விதி 10 மற்றும் 14 (1)(ந)ன் படி உறுதிப்படுத்துகிறது. நாட்டின் சட்டமே அரசாங்கம் சிறுபான்மையினரை சம உரிமையுள்ள குடிமக்களாக அங்கீகரிப்பதை தூரமாக்குகிறது. நாட்டின் சட்டத்தின் ஊடாக அவர்கள் இரண்டாம்தர குடிமக்களாக இருப்பது நிறுவப்பட்டுள்ளது. பௌத்தத்துக்கு முதன்மையான ஸ்தானம் வழங்குவதன் மூலம் பிரஜைகளின் பாதுகாப்புக்கு பொறுப்பான அரசாங்கம் சிறுபான்மை இன - மத குழுக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது, ஆனால் அவர்களும் கூட இந்த நாட்டின் குடிமக்களே. அரசியலமைப்பின் 9வது பிரிவு பௌத்த மத நிறுவனங்களுக்கு கண்ணுக்கு புலப்படாத ஒரு அதிகாரத்தை வழங்கியுள்ளது, அது நாட்டின் இறையாண்மையை சேதப்படுத்துவதற்கு பயன்படுத்த முடியும். குடிமக்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளுக்கு இடையில் உள்ள உறவில் எந்தவொரு வரம்பு மீறலோ அல்லது தடையோ இன்றி பௌத்த மத நிறுவனத்தால் குறுக்கீடு செய்யப்படலாம் அல்லது வேறுவகையில் சொன்னால் அந்த குறுக்கீடு அரசியலமைப்பின் ஊடாகவே ஊக்குவிக்கப்படுகிறது.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரின் சமீபத்தை அறிக்கைகள், முன்னையது அரசாங்கம் சட்டத்தை எப்படி நடத்தவேண்டும் மற்றும் நடத்தக்கூடாது என்று சொல்வதுடன் சமீபத்தைய அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றிய மற்றைய அறிக்கையும் கவலை தருதாக உள்ளது. முந்தைய அறிக்கைகளில் மகாநாயக்கர்கள் பெரும்பான்மை சிங்கள - பௌத்தர்களுக்கு எதிரான சிறுபான்மையினரின் செயல்பாடுகள் மற்றும் அந்த செயல்பாடுகள் பற்றி அரசாங்கம் மௌனம் பாலிப்பதையும் கவனத்தில் கொண்டிருந்தது. மேலும் அவர்கள் தெரிவித்திருந்தது, பிக்கு கலகொட அத்தே ஞ}னசார தேரரின் ஆக்கிரோஷ நடவடிக்கைகள் மற்றும் பேச்சுக்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அவரால் விபரிக்கப்பட்ட கருத்தை நிராகரிக்க முடியாது என்று. ஞ}னசார தேரர் சட்டத்தை தனது சொந்தக் கரங்களில் எடுத்துக் கொண்டதுக்காக அஸ்கிரிய பீட மாகாநாயக்கர் அவரைக் கண்டிக்கவில்லை. எவ்வாறு ஒருவர் நடத்தையையும் மற்றும் சித்தாந்தத்தையும் வேறு பிரிக்க முடியும் என்பது பிரச்சினையானது. ஞ}னசார தேரவுக்கு பிரச்சினைகளைத் தீர்ப்பது சாத்தியப்படாவிட்டால் இன மத குழுக்கள் மத்தியில் ஒருவருக்கொருவர் வன்முறையை தூண்டுவதை விடுத்து அவர் நாட்டின் சட்டத்தின் ஊடாக பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இதில் விரக்தி தரும் காரணி என்னவென்றால் மகாநாயக்க தேரர்கள் ஞ}னசார தேரரின் வன்முறை நடத்தைகளை மறுக்கிறார்களா அல்லது அப்படி பாசாங்கு செய்கிறார்களா என்பதுதான். ஒரு சிறுபான்மைக் குழுவினர் ஒரு பௌத்த கோவிலைத் தாக்கினால் என்ன நடக்கும் என்பதை ஒருவரால் கற்பனை செய்துபார்க்க முடியும். அங்கு அமைதி நிலவுமா அல்லது அரசியலமைப்பின்படி முதன்மை ஸ்தானம் வழங்கப்பட்டுள்ள பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களாகிய நாங்கள் அந்த தாக்குதலை கவனிக்காமல் விடப்போகிறோமா. ஞ}னசார தேரர் சட்டத்தை தனது சொந்தக் கரங்களில் எடுத்ததை அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் மறைமுகமாக ஞ}னசார தேரரின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டதின் மூலம் சாதாரணமாக்கப் பட்டுள்ளது அல்லது நடுநிலையாக்கப் பட்டுள்ளது.
அஸ்கிரிய பீட மகாநாயக்கர், ஞ}னசார தேரர் தவறாக நடந்து கொள்கிறார் என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டால், மாகாநாயக்கர்கள் அதற்கு பதிலளிக்கும் விதமாக, நாட்டிலுள்ள மிகவும் பொறுப்பான பௌத்த மத அதிகாரசபையின் பொறுப்புக்கூறும் குழு என்கிற வகையில் ஞ}னசார தேரருக்கு எதிராக முறைப்படியான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
அஸ்கிரியபீட மகாநாயக்க சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையொன்றில் சொல்லியிருப்பது, ஸ்ரீலங்காவுக்கு ஒரு புதிய அரசியலமைப்பு தேவையில்லை என்று. இந்த அறிவிப்புக்கு ஆதரவாக இரண்டு காரணங்கள் பிரதானப் படுத்தப்பட்டுள்ளன, இந்த நேரத்தில் அரசியலமைப்பில் சீர்திருத்தம் செய்யப்படுவது அவசியமற்றது மற்றும் அப்படி ஒரு மறுசீரமைப்பு தேவைப்பட்டால், முதன்மை ஸ்தானம் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட வேண்டும், நாட்டின் ஒற்றையாட்சி முறை தொடர வேண்டும் மற்றும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் அகற்றப்படக் கூடாது. உண்மையில் இதில் உள்ள முரண்பாடு என்னவென்றால் தற்போதுள்ள சட்டத்தின்படி பௌத்தத்துக்கு வழங்கப் பட்டுள்ள முதன்மை ஸ்தானத்தின்படியே அறிக்கை இயக்கப்படுகிறது மற்றும் அரசாங்கம் விதிகளை மறுசீரமைப்பு செய்யக்கூடாது என்பதற்கும் வழி தேடுகிறது, வேறுவகையில் சொல்வதானால் எதிர்காலத்தில் தீவின் ஆட்சியில் தலையீடு செய்வதற்கு இதேபோன்ற அறிக்கைகளை வெளியிட்டு அதிகாரம் செய்ய முயலுகிறது.
அரசாங்கத்துக்கு அறிவுரை சொல்வதற்கு பௌத்த மத நிறுவனங்கள் குடிமக்களின் வாக்குகளின் ஊடாக தெரிவு செய்யப்பட்டவை அல்ல. இதன்படி பௌத்த மத நிறுவனங்கள் அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் செய்வதற்கு குடிமக்களினால் அதிகாரம் வழங்கப்பட்டவை அல்ல. மேலும் ஆட்சியில் மத குறுக்கீடுகள் மக்களின் மனங்களில் சாதாரணமாக்கப்பட்டுள்ளன அதேபோல அது அரசியலமைப்பாலும் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பிரஜைகள் பல்வேறு இன - மத குழுக்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே என்று மட்டுப்படுத்தவோ அல்லது குறைக்கவோ முடியாது. அவ்வாறு மட்டும் என்று குறைக்கப் பட்டாலும், அவர்கள் தேர்தல்களில் வெவ்வேறு அரசியல் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் மற்றும் அவர்களின் அரசியல் கருத்தியலை பிரதிநிதித்துவப் படுத்தும் பிரதிநிதிகளைப் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்கிறார்கள். இந்தப் பின்னணியில் ஒரு ஜனநாயக அமைப்பில் குடிமக்கள் கொண்டிருக்கும் அதிகாரம அளவிட முடியாதவை மற்றும் அது பாதுகாக்கப்பட வேண்டும். இருப்பினும் ஸ்ரீலங்காவில் இந்த அதிகாரத்தில் பௌத்த மத நிறுவனங்கள் தலையிடுகின்றன. ஸ்ரீலங்கா பௌத்த மத நிறுவனங்களில் அஸ்கிரிய பீடம் மிகவும் முக்கியமான அதிகாரமுள்ளதாகக் கருதப்படுவதால், அரசாங்கத்தின் தீர்மானங்களில் தனது அதிகாரத்தின் மூலம் அது செலுத்தும் செல்வாக்கு மிகவும் அதிகம். அரசாங்கத்தில் நேரடியாக தாக்கம் செலுத்துவதைத் தவிர அஸ்கிரிய பீடம் கொண்டுள்ள அதிகாரம் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்கள் மீது செலுத்தும் செல்வாக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
அரசாங்கம் அரசியலமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்வதை தடுக்க பௌத்த மத குருமார் அறிக்கை வெளியிடுகின்றனர். அஸ்கிரிய பீட மகா நாயக்கர்கள், நாட்டின் அரசியலமைப்பை சீர்திருத்துவது இந்த நேரத்தில் முக்கிய முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய ஒன்றல்ல என்று கோருகிறார்கள். ஜனநாயகத்தை செயற்படுத்துவது தீவிர கேள்வியாகியுள்ளது. நாட்டுக்கு நல்லது எது என்பதை முடிவு செய்வது அஸ்கிரிய பீட மகாநாயக்கர்கள் என்றால் அல்லது வேறு வகையில் சொன்னால் நாட்டைப் பற்றிய முடிவுகளை மக்களுக்காக மேற்கொள்வதற்காக ஜனநாயக முறைப்படி மக்களால் தோந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வைத்திருப்பது நியாயமில்லை. அஸ்கிரிய பீடத்தை சேர்ந்த பௌத்த பிக்குகளுக்கு ஏற்கனவே மக்களுக்கு எது சிறந்தது என்று மிக நன்றாகவே தெரியும். எனவே இந்த நியாயப்படி ஸ்ரீலங்கா அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு நாட்டின் ஆட்சியை அஸ்கிரியபீட மகாநாயக்கர்களிடம் வழங்கலாம்.
அரசியலமைப் சீர்திருத்தம் தொடர்பாக 2016ன் ஆரம்பத்தில், அமைச்சரவை அமைச்சர்களால் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மக்களின் கருத்துக்களை சேகரிப்பதற்காக பொதுமக்கள் பிரதிநிதித்துவ குழு, ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் பிரதிநிதித்துவ குழு, அத தொடர்பாக தீவு முழவதிலும் இருந்து கிடைக்கப்பெற்ற பெரும் அளவிலான எழுத்துமூல மற்றும் வாய்மொழி மூல சமாப்பிப்புக்களை கவனத்தில் எடுத்து வருகிறது. அஸ்கிரியபீட மகாநாயக்கர்கள் மக்களால் வழங்கப்பட்ட அனைத்து கருத்துக்களையும் அலட்சியம் செய்வதாக இருந்தால், இங்கு பௌத்தர்களின் முழமையான ஆட்சியைத் தவிர வேறு எதுவும் மிச்சமாக இல்லை என்பதே கருத்து. இந்த நேரத்தில் அரசியலமைப்பு சீர்திருத்தம் அவசியமில்லை என்று அரசாங்கத்துக்கு அஸ்கிரியபீட மகாநாயக்கர்கள் ஒரு அறிக்கை வெளியிடுவது ஜனநாயகத்தை சவாலுக்கு உட்படுத்துகிறது. மற்றொரு வழியில் அஸ்கிரிய பீடம் அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுகிறது. இந்த இரண்டு வகைகளுக்கும் அப்பால் மேலும் அஸ்கிரியபீட மகாநாயக்கர்கள், அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் பிரதிநிதித்துவ குழுவிடம் நாட்டின் அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக மக்களால் வழங்கப்பட்ட நேரடிக் கருத்துக்களை முற்றாக நிராகரிக்கிறார்கள். நாட்டின் ஜனநாயகம் பௌத்த மேலாதிக்கத்தினால் தலையீடு செய்யப்படுவதுடன் நாட்டின் இறையாண்மையும் கேள்விக்குள்ளாகிறது. நாட்டின் இறையாண்மைய சீர்குலைப்பதற்கு வெளிநாட்டு தலையீடு மிக முக்கியமான ஒரு தேவையாக இல்லை மாறாக அரசாங்கத்துக்கு உள்ளும் மற்றும் அதன் கீழும் உள்ள மேலாதிக்க குழுவைச் சேர்ந்தவர்களின் செல்வாக்கின் மூலமும் அதைச் செய்து முடிக்கலாம். இதில் உள்ள முரண்பாடு என்னவென்றால் இந்த செல்வாக்கு உள்நாட்டிலுள்ள மற்றும் மேலாதிக்கமுள்ள செல்வாக்கான குழுவிடம் இருந்து வரும் ஒன்று என்பதால் பெரும்பான்மையான மக்கள் அந்த செல்வாக்குடன் சேர்ந்துள்ள தீமையை காண முடியாதவர்களாக உள்ளார்கள்.
சுதந்திரம் பெற்று 65 வருடங்களுக்கு மேலாகியும் அரசாங்கத்துக்கும் மற்றும் குடிமக்களுக்கும் இடையேயுள்ள இடைவெளிக்கு பாலம் போட முடியாமல் ஸ்ரீலங்கா இன்னமும் தவித்து வருகிறது. துரதிருஷ்டவசமாக பெரும்பாலான குடிமக்கள், பிரதிநிதிகளைத் தெரிவு செய்து நாட்டின் முடிவுகளை எடுக்கும் நடவடிக்கையில் பங்குகொள்ளும் தங்களுக்குள்ள திறமையில் இன்னும் நம்பிக்கையற்றவர்களாகவே உள்ளார்கள், மாறாக அரசாங்க ஆட்சியில் பௌத்த மதத்தின் தொடர்ச்சியான தலையீடு இருந்து வருகிறது. இந்தப் பின்னணியில் நாட்டின் இறையாண்மை பௌத்த மத நிறுவனங்களால் சீர்குலைக்கப்பட்டு தீங்கு விளைவிக்கப் படுவதுடன், மற்றும் மற்றைய மதங்களைவிட பௌத்த மதத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் அரசியலமைப்பின் உதவியுடன் ஸ்ரீலங்காவாசிகளின் உளப்பாங்கு சாதாரணமாக்கப் படுகிறது.
-அனுஷ்க ககந்தகம-
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
நன்றி- தேனீ
No comments:
Post a Comment