வவுனியாவில் 15,000 தற்காலிகக் கூடாரங்கள்
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைப்பதற்காக வுனியா மெனிக்பாம் பிரதேசத்தில் 36000 தற்காலிகக் கூடாரங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் தற்போது 1,500 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார். இக்கூடாரங்கள் அமைக்கும் பணியை இராணுவமும், பொலிஸாரும் மேற்கொண்டு வருவதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் ஐக்கிய மக்கள் நிவாரண ஆணைக்குழு ஆகிய நிறுவனங்கள் என்பன இக்கூடாரங்களை வழங்க முன்வந்துள்ளன. மேலும் 20,000 கூடாரங்கள் பாகிஸ்தானிலிருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ள அவர் 16,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள பஸ்களை உபயோகித்து இடம்பெயர்ந்து வரும் தமிழ் மக்களுக்கு இக்கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment