21 April 2009

3000 பொதுமக்கள் தஞ்சம்

விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுமாத்தளன், அம்பலவன்பொக்கனை பகுதிகளில் இருந்து மேலும் 3000 பொதுமக்களை இராணுவத்தினர் இன்று காலை மீட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.
பாதுகாப்பு வலயங்களான புதுமாத்தளன் அம்பலவன்பொக்கனை பகுதிகளில் இராணுவத்தினர் படை நடவடிக்கை தொடர்வதாகவும் பல பகுதியினை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கையை இராணுவத்தின் 58ஆம் மற்றும் 53ஆம் படையணியினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அதேவேளை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுமாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கனை பகுதிகளில் இருந்து நேற்றைய தினம் 30,000 கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர்.

No comments:

Post a Comment