இலங்கையின் வடகிழக்கே மேலும் சில பகுதிகள் இராணுவத்தினர் வசம்
இலங்கையின் வடக்கே போர் நடைபெறும் பிரதேசத்தில் இருக்கும் புதுமாத்தளன் மருத்துவமனை பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக இலங்கை இராணுவம் போரற்ற பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் கிழக்கு கடற்கரை பகுதிவழியாக புதுமாத்தளன் பகுதிக்குள் தாங்கள் புகுந்ததாக பாதுகாப்புத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும் என அரசு விதித்திருந்த 24 மணி நேர காலக் கெடு இன்று மதியம் இலங்கை நேரம் 12 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது.
நேற்று தொடக்கம் இன்று வரை 49,000 பொதுமக்கள் போர் பிரதேசங்களிலிருந்து வெளியேறி புதுக்குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளதாகவும் பாதுகாப்புத்தரப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment