நிவாரணக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை உறவினர்கள் சந்திக்க ஏற்பாடு
வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை வெளியில் உள்ள தமது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறு வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ளவர்களில் சுமார் 65,000 பொதுமக்கள் இக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களினால் இவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கும் வகையில் விசேட அடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்திய அரசியல் தலைவர்களை சந்திக்க த.தே. கூட்டமைப்பு தீர்மானம்
இந்தியாவின் அழைப்பை ஏற்று, இந்திய அரசியல் தலைவர்களைச் சந்திப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தமைக்கு அமைய 15ம் திகதியும், 16ம் திகதியும் இந்திய அரசியல் தலைவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடுவர் என்று கூட்டமைப்பின் பா. உ தெரிவித்தார்.
No comments:
Post a Comment