மோதலற்ற பகுதிக்கு சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் செல்லவேண்டிய அவசியம் இல்லை
வன்னியில் மோதல்களற்ற பிரதேசமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு உதவ சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் ஏதும் செல்லவேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னை சந்தித்த பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு வெளிநாட்டமைச்சர்களிடம் கூறியுள்ளதாக பி..பி.சி செய்தி தெரிவித்துள்ளது கொழும்புக்கு தெற்கே அம்பிலிப்பிட்டியவில் ஜனாதிபதிக்கும் ,இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களான, டேவிட் மிலிபாண்ட் மற்றும் பெர்னார்ட் குஷ்னர் ஆகியோருக்கும் இடையே நடந்த சந்திப்பின்போதே இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் படையினர், வெளிநாட்டு அமைப்புகள் எவற்றின் உதவியுமின்றி அப்பகுதியில் சிக்குண்டிருந்த சுமார் 115,000 மக்களை இதுவரை விடுவித்திருப்பதாகவும், எஞ்சியுள்ள நிலப்பரப்பில் சிக்குண்டுள்ள மக்களையும், அவ்வாறே தொடர்ந்து, நிதானமாக விடுவிப்பார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக அரச வட்டாரங்கள் தெரிவித்தன.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வரும் மக்கள் சோதனை செய்யப்படும் இடங்களில் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள், மேலும் கூடுதலாக அனுமதிக்கவேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை, சூழ்நிலைக்கேற்ப கருத்திலெடுக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அரச வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment