பத்து லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வருகை- மகிந்த சமரசிங்க
பத்துலட்சத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையம் வழங்க அரசு பொறுப்புடன் செயற்பட்டு வருவதாகவும் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் உள்ள மக்களின் நிலை குறித்தும் பிரான்ஸ் - பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர்களின் விஜயம் குறித்தும் ஸனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். இங்கு கலந்து கொண்டு தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித்த கோஹன அரசக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு 10,8535 பொதுமக்கள் வந்தடைந்துள்ளனர் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற அரசு பொறுப்புடன் செயற்பட்டு வருகிறது. இவர்கள் வவுனியாவில் அமைந்துள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் 12,393 பொதுமக்கள் மோதல் பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டனர். யாழ்ப்பாண நலன்புரி நிலையத்தில் 11,143 பேரும் ,மன்னாரில் 756 பேரும், திருகோணமலையில் 5,614 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் பிரான்ஸ், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் விஜயத்தின் போது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கவென 7.5 மில்லியன் பவுண் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment