30 April 2009

தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பு

இலங்கையின் வடக்கே இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் கடும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென தமிழக அரசு சுமார் 900 மெட்ரிக் டண்கள் அளவிலான நிவாரணப் பொருட்களை 30-04-2009 கொழும்பிலுள்ள இந்தியத் தூதர் அலோக் பிரசாத் இன்று முறைப்படி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளிடம் கையளித்துள்ளார்.

சுமார் 40,000 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வகையில் தனித்தனி பொதிகளாக கட்டப்பட்டுள்ள இதில் அரிசி, பருப்பு, சீனி, சமையல் பாத்திரங்கள், உடைகள் ஆகியவை உட்பட குடும்பம் ஒன்றுக்கு இரண்டு வாரகாலம் தேவையான பொருட்கள் இருப்பதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

வன்னியில் மோதல்கள் ஆரம்பித்த பிறகு தமிழக அரசு அனுப்பும் இரண்டாவது தொகுதி உதவிப் பொருட்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment