ஜனாதிபதி ஜோர்தான் பயணம்
ஜோர்தானில் ஜீ-11 மற்றும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதிக்கு ஜோர்தான் குயின் அலியா சர்வதேச விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. அவரை அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் அமைர் ஹடீடி வரவேற்றதோடு அவருக்கு அணிவகுப்பு மரியாதையையும் இடம் பெற்றது. இம்மாநாட்டில் மத்திய கிழக்கு நாடுகள், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளின் (ஜீ-11) விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன. இந்த ஜீ-11 மற்றும் உலக பொருளாதார மாநாட்டில் 79 நாடுகளின் தலைவர்களும் 1200க்கு மேற்பட்ட பிரபல தொழிலதிபர்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
No comments:
Post a Comment