14 May 2009

அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றாவது புலிகள் சரணடைய வேண்டும் - பாலித கோஹன

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கோரிக்கையை ஏற்றாவது புலிகள் ஆயுதங்களை களைந்து சரணடைவார்கள் என்று எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித்த கோஹன தெரிவித்துள்ளார். அத்துடன் பல சர்வதேச நாடுகளும் புலிகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடையவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. இலங்கை அரசாங்கமும் இந்த கோரிக்கையையே முன்வைத்துள்ளது. தற்போதைய நிலைமையில் சர்வதேச சமூகம் கடுமையான தொனியில் புலிகளுக்கு அழுத்தம் தெரிவித்து வருகின்றது. எனவே சர்வதேசத்தின் கோரிக்கைக்கு தற்போதைய நிலைமையிலாவது புலிகள் இணங்கி சரணடைய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment