19 May 2009

புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலம் அடையாளம் காணப்பட்டது

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் இன்று (19-05-2009)நந்திக்கடல் கரையோரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகபாதுகாப்புத்தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன. சடலம் பிரபாகரனின் சடலம் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளார். படையினருக்கும் புலிகளுக்கும் இடையிடையில் இடம்பெற்ற இறுதி மோதலில் ஏனைய தலைவர்களுடன் பிரபாகரனும் கொல்லப்பட்டார் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்த போதும் சடலம் அடையாளம் காணப்படாததால் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் என புலிகள் சார்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் பிரபாகரனின் சடலம்தான் கண்டெடுக்கப்பட்டமை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment