இந்த நாட்டில் இதன்பின்னரும் தமிழ் முஸ்லிம் பேகர் மலே என்பவர்கள் சிறுபான்மையினர் அல்லர். அனைவரும் இநநாட்டின் பிரஜைகளே. சிறுபான்மை என்ற சொல்லை மூன்று வருடங்களுக்கு முன்னரே எமது அகராதியிலிருந்து நீக்கியுள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
புலிகளிகள் ஆக்கிரமித்த பிரதேசங்கள் அனைத்தையும் படையினர் மீட்டெடுத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் இன்று காலை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போதே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்த நாடு முன்னுதாரணமான ஒரு சிரேஷ்ட நாடாகும். எங்களுடைய சிரேஷ்ட மன்னர்களான துட்டகைமுனு போன்றவர்களால் பேனப்பட்டு வந்த சிறந்த நற்பண்புகளபை; பின்பற்றி சரணடைந்த அல்லது உயிரிழந்த எதிரியையும் நாம் கௌரவிக்க வேண்டும.; இது அரசாங்கத்திடம் மாத்திரமின்றி இந்நாட்டு மக்கள் மத்தியிலும் காணப்படும் ஒரு சிறந்த நற்பன்பாகும்.
பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக எமது நாட்டை விட்டு வெளியேறிய மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பி வர வேண்டும் என அழைப்பு விடுகிறேன். பல உலக நாடுகளில் வசிக்கும் எமது வைத்தியர்கள் பொரியியலாளர்கள் மற்றும் கணக்காளர்கள் போன்ற புத்தி ஜீவிகள் நாடு திரும்பி நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இந்த மக்களுக்கு நாட்டின் ஏயை பகுதிகளைச் சார்ந்தவர்;களுக்குப் போன்று ஜனநாயக உரிமையை நாம் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதேபோன்று அவர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். எனினும் அது வெளிநாடுகளால் முன்வைக்கப்படும் தீர்வல்ல. ஒவ்வொரு நாடும் முன் வைக்கும் தீர்வுத் திட்டத்தைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு கால அவகாசம் இல்லை. எனவே எங்களுடையதான ஒரு தீர்வுத் திட்டத்தையே நாம் வழங்கவேண்டியுள்ளது.
அது அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்ககொள்ளக் கூடிய நியாயமான தீர்வுத் திட்டமாக இருக்கவேண்டும். இதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பேயன்றி தடைகளை நாம் எதிர்பார்க்கவில்லை. எங்களால் முன்வைக்கப்படும் தீர்வு உலகுக்கே ஒரு முன்னுதாரணமாகத் திகழும்.
இப்போது இந்த நாட்டில இரண்டு சாதியினரே உள்ளனர். ஒரு சாரார் நாட்டுப் பற்றுடையவர்கள் மற்றவர்கள் நாட்டுப்பற்றற்றவர்கள் ஆவர். குறைந்த எண்ணிக்கையிலான ஒரு சாராரே நாட்டுப் பற்றில்லாதவர்களாக உள்ளனர்.
இன்று நாம் கண்டுள்ள வெற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி மட்டுமல்ல தேசியக்கொடியின் கீழ் ஒன்று கூடிய அனைவரினதும் வெற்றியாகும். படை வீரர்களின் உயிர் தியாகத்தின் மத்தியில் மீட்கப்பட்ட நாட்டை காட்டிக்கொடுக்கவோ, விற்பனை செய்யவோ, சூறையாடவோ வஞ்சகர்களுக்கும் மோசடியாளர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் ஊழல் பேர்வழிகளுக்கும் தாரைவார்க்கவோ முடியாது.
இலங்கையில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டமை உலக ஜனநாயகத்துக்கான ஒரு வெற்றியாகும். உலக பயங்கரவாதத்தை ஒழிப்பதறகான நடவடிக்கை இந்தச் சிறிய நாட்டிலிருந்து ஆரம்பமாவதாக அமைகிறது.
அடுத்து நாம் அபிவிருத்திப் பாதையில் தடம் பதிக்க வேண்டும். வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு கடந்த பல தசாப்தங்களாக அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை அமையவில்லை, சுதந்திரம் இருக்கவில்லை, அபிவிருத்தி கிடைக்கவில்லை, நான் அவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடு;ப்பதற்கான பொறுப்பை ஏற்கிறேன்.
நன்றி- இலங்கை அரசின் உத்தியோகபூர்வ செய்தி ஊடகம்
No comments:
Post a Comment