23 May 2009

இந்திய மருத்துவர் குழு வருகை

இலங்கையில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவும் பொருட்டு எட்டு மருத்துவர் உட்பட 27 பேர் அடங்கிய குழு 25 தொன் நிவாரண பொருட்களுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது புல்மோட்டை பகுதியில் 110 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட இந்திய மருத்துவ முகாமை வவுனியாவுக்கு மாற்றுமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாகவும் பிரிகேடியர் பி.சச்டேவா ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார். பாலம் விமானத்தளத்திலிருந்து விங் கொமாண்டர் எச்.பி.குமார் தலைமையில் இந்திய விமானப் படையின் ஐ எல் 76 ரக விமானத்தில்; அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிவாரணப்பொருட்கள் இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment