அரசியல் தீர்வுத்திட்டம் - இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் - ஹிலாரி
இலங்கையில் விரைவில் அரசியல் ரீதியான தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்குமாறு அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தொலைபேசி ஊடாக கோரிக்கை விடுத்துள்ளதாக அமெரிக்க ராஜாங்க செயலகத்தின் பேச்சாளர் இயன் கெலி தெரிவித்ததாக செய்திகள் தெரிவித்துள்ளன. மேலும் யுத்தத்தினால் இடம் பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் 300,000 இற்கு அதிகமானோரை மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐ.நா செயலாளர் நாயகத்துடன் கலந்துரையாடிய பின் ஹிலாரி ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்த வலயத்தின் மனிதாபிமான நிலவரங்களை நேரில் பார்வையிட்டு மதிப்பீடுகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமெனவும் 26 வருடங்களாக இடம்பெற்ற மோதல் முடிவுக்கு வந்திருப்பதால் தமிழர்களது உரிமைகளை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment