மட்டக்களப்பிலிருந்த 57 குடும்பங்கள் மீள்குடியேற்றம்
திருகோணமலை மாவட்டம் மூதூர் மற்றும் சேருவிலை பிரதேசங்களிலிருந்து 2006 ஆம் ஆண்டு யுத்த அகதிகளாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்திருந்தோரில் 57 குடும்பங்களைச் சேர்ந்த 237 பேர் இன்று தமது சொந்த கிராமங்களுக்கு திரும்பியுள்ளனர்.
5,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்த போதிலும் சுமார் 800 குடும்பங்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருந்தன.
சேருவிலை பிரதேசத்திலுள்ள அதியமான்கேனி, தங்கநகர்,சிவபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 45 குடும்பங்களும், சம்பூர் மற்றும் சந்தோஷபுரத்தைச் சேர்ந்த 12 குடும்பங்களும் தமது சுய விருப்பத்தின் பேரில் கிளிவெட்டியிலுள்ள இடைதரிப்பு முகாம்களில் தங்கியிருக்க இணங்கிய இக்குடும்பங்கள் மட்டக்களப்பிலிருந்து 10 பஸ்களில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகளினால் வெருகல் ஊடாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment