கிறீன் ஓசியன் கப்பல் முள்ளிவாய்க்கால் நோக்கி பயணம்
இரண்டு தினங்களாக உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு முள்ளிவாய்க்கால் பகுதிக்கு செல்ல முடியாமல் திருகோணமலைக்கு திரும்பிய கிறீன் ஓசியன் கப்பல் மீண்டும் இன்று காலை 500 தொன் உணவுப் பொருட்களுடன் ஓரியன்டல் பிரின்சஸ் கப்பல் புறப்பட்டு சென்றுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்க தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நிலைமைகள் சுமூகமாக இருப்பின் உணவுப் பொருட்களை இறக்கிவிட்டு கப்பல் நோயார்கள், மற்றும் காயமடைந்தவர்களை புல்மோட்டைக்கு ஏற்றி வரும் என்றும் சரசி விஜேரட்ண தெரிவித்தார். அங்கு தொடர்ந்து நிலவும் மோதல் நிலை காரணமாக உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் பொருட்களை இறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் இதனால் நோயாளர்கள், காயமடைந்தவர்களை அழைத்துவர முடியாத நிலை ஏற்பட்டது.
No comments:
Post a Comment