முதியோர்கள் சமளங்குளம் முதியோர் இல்லத்தில் ஒப்படைப்பு
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வயோதிபர்கள் 58 பேர் முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர். உறவினர்களுடம் சேர்ந்து வாழக்கூடிய முதியவர்களை தவிர உறவினர்கள் இல்லாது தனிமையில் வாழும் வயோதிபர்களை முகாம்களில் வைத்து பாராமரிக்காது அவர்களுக்கான முதியோர் இல்லத்தில் சேர்த்து பராமரிக்கும்படி வவுனியா மாவட்ட நீதிமன்றம் அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது அதற்கமைய சமளங்குளம் அரசினர் பாடசாலையில் இயங்கத் தொடங்கியுள்ள வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தின் முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment