01 May 2009

யசூசி அகாஷி நலன்புரி முகாம்களுக்கு விஜயம்

ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி, வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா, செட்டிகுளம், கதிர்காமர் மற்றும் இராமநாதன் நலன்புரி கிராமங்களுக்கு விஜயம் செய்தார். நலன்புரி கிராமங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் தொடர்பாகவும், மக்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக திருப்தி வெளியிட்டுள்ள யசூசி அகாசி பொதுமக்களை மீளகுடியேற்றும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் வழங்கும் என்று உறுதியளித்துள்ளதாக அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிவாரணப்பொருட்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்;மானித்துள்ளதாக இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment