01 May 2009

முசலிப் பிரதேசத்தில் மீள் குடியேற்ற நடவடிக்கை- ஐ.நா வரவேற்பு

மன்னார் மாவட்டம் முசலிப் பிரதேசம் சவேரியாபுரம் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்துளள 400 இற்கும மேற்பட்டவர்கள் இரண்டு வருடங்களின் பின்பு மீண்டும் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்ப்பட்டார்கள்.இந்நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் வரவேற்றுள்ளது.

இந்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 கிராமங்களை உள்ளடக்கிய மேலும் 3,000 இற்கும் அதிகமானோர் சொந்த இடங்களுக்கு திரும்ப தங்களை பதிவு செய்துள்ளதாக ஐ.நா.அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் தனது அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.இதே போன்று வடபகுதியில் இடம் பெயர்ந்த நிலையில் இருக்கும் மக்களும் மீண்டும் தமது இருப்பிடங்களுக்கு செல்வார்கள் என தாங்கள் நம்புவதாக அந்த அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அமின் அவாத் கூறுகின்றார்.

கடந்த சில வாரங்களாக இம்மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்புவது குறித்தும் அது தொடர்பாக அவர்களுக்கு கவலைகள் குறித்தும் அவர்களிடம் தாங்கள் பேசியதாகவும் அப்படி செல்பவர்கள் தங்கும் பகுதிகளில் ஐ நா வின் பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்புக் குழு மேற்பார்வை செய்யும் என்று அமின் அவாத் தெரிவிக்கின்றார். இவர்கள் மீளக் குடியமர்த்தப்படும் முன்னதாக அங்கு நிலக் கண்ணி வெடிகள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளதை தாங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் எனினும் அவர்களது இருப்பிடங்கள் தொடர்பிலும் திரும்பிய மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்தும் தாங்கள் கவலை கொண்டுள்ளதாகவும் ஐ நா வின் அகதிகளுக்கான உயரதிகரி குறிப்பிடுகின்றார்.

No comments:

Post a Comment