01 May 2009

இடம்பெயர் மக்களுக்கான உலக நாடுகளின் உதவி

யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்க நோர்வே, இந்தியா, சுவிஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் முன் வந்துள்ளன.

நோர்வே, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச பொது அமைப்புகள் ஊடாக 10மில்லியன் அமெரிக்க டொலர் உதவி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நோர்வே உயர் ஸ்தானிகராலயப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா

திருகோணமலை புல்மோட்டையில் தள வைத்தியசாலையும், மருத்துவர்களையும் மருத்துவ உதவிகளையும் வழங்கியுள்ள இந்தியா, மேலும் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்க முன் வந்துள்ளது .இதன் பிரகாரம் 40 ஆயிரம் குடும்பங்களுக்குரிய உதவிப் பொதிகள் ஏற்கனவே இடம்பெயர்ந்தோருக்கு வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் 50 ஆயிரம் பொதிகள் விரைவில் வந்தடையவிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பான்

இடம் பெயர்ந்துள்ள மக்களின் உடனத் தேவைகளைப் பூர்;த்தி செய்யும் வகையில் ஜப்பான் 4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை யு.என்.எச்.சி.ஆர் ,ஐ.சி.ஆர்.சி., யுனிசெப், புலம் பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு ஆகியவற்றின் ஊடகவே வழங்கத் தீர்மானித்துள்ளது.

சுவிஸ்

அவசர மனிதாபிமான உதவிகளுக்காக 1.23 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளை வழங்க சுவிஸ் முன்வந்துள்ளது. ஐ.சி.ஆர்.சி., உலக உணவுத் திட்டம், மற்றும் யு.என்.எச்.சி.ஆர். ஆகியன ஊடாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது

No comments:

Post a Comment