ரத்தக்களறி ஏற்படக் கூடும் என்று ஐ.நா கவலை
இலங்கையில் மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பாருக்கும் சர்வதேச மனித நேய சட்டங்கள் மற்றும் போர் தொடர்பான சட்டங்களின் அடிப்படையில் தமது கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் நடப்பதை உலகம் கவனித்து வருவதாகவும், இரு தரப்பாரும் பொதுமக்களின் நலன்களை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில் அங்கு ரத்தக்களறி ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாகவும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கார்டன் பி.பி.சிக்கு தெரிவித்தார் கடந்த வாரத்தின் இறுதியில் இடம் பெற்ற தாக்குதல்களும், அதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மேலும் ஒரு முறை இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகளின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
போர் நடக்கும் பகுதிகளுக்கு செல்ல அனுமதி வேண்டும்இதனிடையே சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ற வகையில் இரு தரப்பாரும் நடந்து கொள்கிறார்களா, இருதரப்பும் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மதித்து நடக்கிறார்களா என்பதை உறுதி செய்யும் வகையிலும், அங்கு காயமடைந்தும் நோய்வாய்பட்டும் உள்ள மக்களை சீரான முறையில் வெளியே கொண்டு வர சரியான வழிவகைகளை செய்ய அங்கு தமது பணியாளர்கள் அவசியமாகவும், அவசரமாகவும் செல்ல வேண்டிய நிலை உள்ளது என்றும் ஐ நா கூறியுள்ளது. அங்கு சென்றால்தான் களத்திலுள்ள நிலையை கவனித்து, தேவைப்படும் மக்களுக்கு உடனடியாக தேவையான உதவிகளை செய்து பொதுமக்களின் நலன்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவும் முடியும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான மனிதாபிமான பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் அமின் அவாத் தெரிவித்தார்- நன்றி பி.பி.சி
No comments:
Post a Comment