06 May 2009

வரலாற்றுத் துரோகங்களுக்கு நீண்டதோ, குறுகியதோ ஆன காலத்தில் விலை செலுத்த வேண்டியிருக்கும்

டெலோ இயக்கத்தின் நூற்றுக்கணக்கான போராளிகளும் அதன் தலைவரான ஸ்ரீ சபாரட்ணம் அவர்களும் படுகொலை செய்யப்பட்டு 23 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.


இவர்கள் பாசிச புலிகளால் படுகொலை செய்யப்பட்டபோது அதற்கு நியாயம் சொன்னவர்களும், ஆரவாரித்தவர்களும் எமது சமூகத்துக்குள் இருந்தார்கள். எமது சமூகத்தினுள்ளே புதைந்திருந்த காட்டுமிராண்டித்தனம் மிகக் குரூரமாகவும், சர்வசாதாரணமாகவும், வார்த்தைகளாக வெளிப்பட்டன.


எமது சமூகத்தின் புதல்வர்களை படுகொலை செய்தவர்களுக்கு, குற்றுயிரும், குறை உயிருமாக எரித்தவர்களுக்கு கொக்கோ கோலா வழங்கிய போது 2007 மார்ச் 30 இல் ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், டெலோ போராளிகள் நல்லூர் கந்தன் கருணை இல்லத்தில் படுகொலை செய்யப்பட்டபோது மௌனமாக எமது சமூகம் இதையெல்லாம் ஆதரித்தது.


ஊடக அறநெறிக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத தமிழ் பத்திரிகைகள் புலி பாசிசம் வழங்கிய மனித மண்டை ஓட்டிலிருந்து அமுதபானம் அருந்தின.


1986 ஏப்ரல் மாதங்களில் நடந்த குரூரங்களுடன் ஈழப் போராட்டம் பற்றிய பெருவாரியான மக்களின் நம்பிக்கைகள் தகர்ந்து போயின. அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக இறுதிவரை சகோதரப் படுகொலைகள் நடந்தேறின.


ஒரு போராட்டம் மனித குலத்தின் நியாயமான நேர்மையான அபிலாசைகளுடன் முன்னெடுக்கப்பட வேண்டும். தனி மனித வழிபாடு ஏகபிரதிநிதித்துவ அகங்காரம் மக்களை புறந்தள்ளிய மேலாண்மை யாரையும் எங்கேயும், எப்படியும் கொல்லலாம், நடத்தலாம் என்ற கயமைத்தனம் வரலாற்றுத் துரோகம். இறுதியாக புதுமாத்தளனை கடந்து முள்ளிவாய்க்காலில் நிற்கிறது.
பெரும்படைகள், இராணுவ வெற்றிகள் எல்லாவற்றையும் விட போராட்டத்தின் அறம் என்பதே மேன்மையானது என்பது வரலாற்றால் நிரூபிக்கப்பட்டுள்ளது.


போராட்ட வரலாற்றில் சமூகத்திற்கெதிராக மானிட தர்ம நெறிமுறைகளுக்கு எதிராக தவறுகள் இழைத்தால் நீண்டதோ, அல்லது குறுகிய காலத்தில் அதற்கான விலையை செலுத்த வேண்டியிருக்கும்.
இதனை இனியாவது நாம் உணருவோமா.


புலிகளால் படுகொலை செய்யப்பட்ட டெலோ தலைவர் ஸ்ரீ சபாரட்ணம் மற்றும் போராளிகள் அனைவருக்கும் எம் இதய அஞ்சலிகள்.


பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.

No comments:

Post a Comment