இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சி பிடிப்பது உறுதியாகி விட்டது. இரண்டு தடவைகள் மன்மோகன் சிங் பிரதமராகிறார். இதுவரை தேர்தல்முடிவுகளின்படி காங்கிஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 261 இடங்களை கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடைசியாக கிடைத்த தகவல்களின்படி UPA-257, NDA-166, 3rd Front-78,4th Front-26 கூட்டணி கட்சிகள் இடங்களை பிடித்துள்ளன.
இந்திய நாடாளுமன்ற மரபுகளின்படி அக்கட்சியை ஆட்சியை ஆட்சி அமைப்பதற்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அழைப்பார் என இந்திய சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல் முடிவுகள் சில எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. நிறைய கட்சிகள் வெளியேறிய நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பெரிய அளவு இடங்கள் கிடைக்காது என்ற எதிர்பார்ப்பு பொய்த்துள்ளது.
No comments:
Post a Comment