16 May 2009

பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த ஆதரவு

இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் போரில் பொது மக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுமாயின் அதனை தாம் ஆதரிப்பதாக ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அச் செய்தியில் இலங்கையில் நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பு சுமத்தப்பட வேண்டும், தண்டனை இல்லாத நிலை ஏற்படக்கூடாது என்று ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையருக்காகப் பேசவல்ல ஒருவர் கூறியுள்ளார் இலங்கை, சாத்தியக்கூறான போர்க்குற்றங்களுக்காக விசாரணையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று பிரிட்டனும் கூறியிருந்தது. அரசு, பொதுமக்கள் வாழும் பகுதிகளில் ஷெல் வீச்சுக்களை நடத்தியதாகவும், விடுதலைப்புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பிடித்து வைத்ததாகவும், தப்பியோடும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.

இந்த கருத்து குறித்து பாலித கோஹன மூர்க்கமான பயங்கரவாத இயக்கங்களில் ஒன்று தோற்கடிக்கப்பட்டுவரும் இந்தத் தருணத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்தால் மனிதக் கேடயங்களாகப் பிடித்து வைக்கப்படிருந்த மக்கள் மீட்கப்பட்டுவரும் இவ்வேளை இவ்வாறு பேசுவது விசித்திரமாக இருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment