24 May 2009


தமிழ் கட்சிகள் மத்தியில் உடன்பாடுகள் ஏற்படலாம் - பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் பொதுச் செயலாளர் - திருநாவுக்கரசு ஸ்ரீதரன்
தற்போதைய புதிய சூழ்நிலையில் ஜனநாயக அரசியல் கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் சுதந்திரமாக வேலை செய்தவற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 15,20 வருடங்களாக இத்தகையதொரு சூழ்நிலை இருக்கவில்லை. மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் வௌ;வேறு ஜனநாயக அரசியல் கட்சித் தலைவர்கள் உறுப்பினர்கள் இக்காலப் பகுதியில் தொடர்ச்சியாக கொல்லப்பட்டு வந்திருக்கிறார்கள்.


மக்கள் மத்தியில் வாய்திறக்க முடியாத பயபீதி நிறைந்த சூழ்நிலையொன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. இப்போது கலந்துரையாடுவதற்கும், கூட்டம் கூடுவதற்குமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சமூக பிரக்ஞை உள்ளவர்கள் மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய தலைமுறையைச் சார்ந்தவர்களும் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.


எனவே ஜனநாயகத்தை கட்டியெழுப்புவது வௌ;வேறு கருத்து நிலைகளுடன் வாழ்வதற்கான உரிமையை நிர்மாணம் செய்வது என்பன இங்கு முக்கியமான பணிகளாகும்.
ஒரு சமூகம் வளர்ச்சியடைவதற்கு முன்னோக்கிச் செல்வதற்கு அடிப்படையாக இருப்பது ஜனநாயகம், மனித உரிமை என்பனவாகும். இவற்றை பேனுவதனூடாகவே சமூக பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும். இதைவிட ஆயுத வன்முறை கலாசாரம் முற்றுமுழுதாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.


வன்முறை சாராத அகிம்சை இயக்கம் எமது சமூகத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டும். 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக உள்ளூரில் தமது விவகாரங்களை தாமே பார்த்துக் கொள்கிறோம் என்று மக்கள் மனப்பூர்வமாக கருதுமளவிற்கு ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு கட்டமைப்பொன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
அத்தோடு பிரமாண்டமான அளவில் சமூக பொருளாதார அபிவிருத்தி பணிகள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். இவையே எமது அடுத்தகட்ட பணிகளாக இருக்க முடியும்.


நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்கள் சிலவேளை சிறியவொரு நாட்டின் சனத்தொகைக்கு அல்லது ஒரு பெரு நகரத்தின் சனத்தொகைக்கு சமனான தொகையினராக இருக்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அவர்கள் மனிதர்கள் அனுபவிக்கக் கூடாத துன்பங்களையெல்லாம் அனுபவித்து இழப்புக்களை சந்தித்து உறவுகளை இழந்து நிர்க்கதியாக இந்த முகாம்களுக்கு வந் திருக்கிறார்கள். அவர்களின் உடற்காயங்களும், மனக்காயங்களும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.


இவர்கள் நலன்புரி நிலையங்களிலேயே நடமாடும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே தொழில் வசதி எதுவுமின்றி வாழ்ந்துவிட முடியாது. அவர்கள் முகாம் வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை அசௌகரியங்களை எதிர்நோக்குகிறார்கள். பலபற்றாற்க்குறைகள் அவர்களுக்கு இருக்கின்றன. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்கள் தமது சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும். கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பான சூழ்நிலையில் அவர்கள் மீளக்குடியேற வேண்டும். கண்ணிவெடிகள் அகற்றும் வேலைகள் இந்திய தொண்டு நிறுவனத்தின். உதவியுடன் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூன்று மாதங்களில் இருந்து ஆறு மாதங்களில் மக்கள் மீள குடியேற்றப்படுவார்கள் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.


அத்தகையவொரு சூழ்நிலையில் மக்கள் சொந்தக் காலில் நிற்பதற்கும் தமது தொழில்களை கவனிப்பதற்கும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் தமது வீடுகளையும், நிலங்களையும் புனரமைப்பு செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும். கெடுபிடிகள் இல்லாத சூழ்நிலையொன்று அவர்களுக்குக் கிட்டும் என நம்புவோம். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் தமது விவகாரங்களை தாமே கவனித்துக் கொள்வதற்கான அரசியல் அதிகாரக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவிற்கு எமது ஆலோசனைகளை முன் வைத்துள்ளோம்.


தவிர 13வது திருத்தச் சட்டத்தின் கீழான அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துவதற்கான செயலணிகள் ஆலோசனை குழுக்களிலும் பங்கு பெறுகிறோம். தவிர இலங்கை பல்லினங்களின் தேசமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மிளிர வேண்டும் என்று இடையறாது முயற்சி செய்கிறோம்.


இனிமேலும் இனப்பிரச்சினை தீர்வை தாமதித்துச் செல்வதற்கு எத்தகைய காரணமும் இல்லை. மிகத் துரிதமாக ஓர் அரசியல் தீர்வினூடாகவே மக்களின் மனங்களில் 60 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள காயங்களை ஆற்ற முடியும் என நம்புகிறோம். உண்மையான இதயசுத்தியுடனான அதிகாரப் பகிர்வே அம்மக்களின் அவ நம்பிக்கைகளையும் விரக்தியையும் போக்கும்.


ஏற்கனவே கிழக்கு மாகாணத்திற்கு 13வது திருத்தச் சட்டமூலத்தின் கீழான அதிகாரங்கள் முழுமையாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என்ற மனக்குறை இருக்கிறது.
எமது நிலைப்பாடு தெளிவானது. 13 வது திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் அர்த்த புஷ்டியான யோசனைகள் வரை நாம் முன்னேற வேண்டியிருக்கிறது.


துரதிஷ்டவசமாக த.தே.கூ. புலிகளின் முகவர் அரசியல் கதம்ப கூட்டாகவே இதுவரை செயற்பட்டு வந்திருக்கிறது. இனிமேல் அவர்களின் பிடி இங்கு இல்லாததால் இவர்களுக்குள் அபிப்பிராய மாறுபாடுகள் பிளவுகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. குறிப்பிடத்தகுந்தவொரு குழுவினர் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு செயற்பாடுகளுக்கு பங்களிக்க முன்வரலாம்.


ஜனநாயக வழிக்குத் திரும்பிய கட்சிகள், மாற்று அரசியல் கொள்கை கொண்ட தமிழ் கட்சிகளிடையே ஒரு மித்த கருத்துக்கள் இல்லாத நிலையில் மக்கள் நலனை கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் நீங்கள் முன்னெடுக்கவுள்ள அரசியல் நடவடிக்கைகள் என்ன? மக்கள் தற்போது சந்தித்திருக்கும் மனிதப் பேரவலம் அதிகாரப் பகிர்ந்தளிப்புத் தொடர்பில் பல்வேறு தமிழ் கட்சிகளுக்குமிடையே ஒரு உடன்பாடு அல்லது ஒருமித்த கருத்து நிலவுவதற்கான குறைந்தபட்ச சாத்தியங்கள் தற்போது இருக்கின்றன. எல்லா விடயங்களிலும் ஒருமித்த கருத்து என்பது யதார்த்தமானதல்ல. தமிழ் கட்சியினரும், சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இடதுசாரி அரசியல் கட்சிகளும் மனித பேரவலத்தைச் சந்தித்த மக்களின் துயர்துடைப்பு பணிகளிலும் மறுசீரமைப்பு பணிகளிலும், அதிகாரப் பகிர்விற்கான கட்டமைப்பை உருவாக்குவதிலான கருத்தாடல்களிலும் ஒன்றாக பணி புரியமுடியும். தெற்கின் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த ஜனநாயக சக்திகளும் கல்விமான்களும் கூட இதில் இணைத்துக் கொள்ளப்பட முடியும். அரசுடன் பேசி மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் விதமான செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.


குறிப்பாக இந்தியாவும், சர்வதேசமும் மனித பேரவலம் தொடர்பிலும் அதிகாரப்பகிர்வு தொடர்பிலும் முன்னெப்போதையும் விட அதிகூடிய கரிசனையை கொண்டிருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


நன்றி- தினகரன்

No comments:

Post a Comment