13 May 2009

மகேஸ்வரி வேலாயுதம் - ஓராண்டு நினைவு

மனித வாழ்க்கையானது வாழும் போதே முக்கியத்துவம் பெறுகிறது. மரணத்தின்பின் அதன் முக்கியத்துவம் இழந்துவிடுகிறது’ - ஜே.ஜே. கிருஷ்ணமூர்த்தி.

மகேஸ்வரி அக்காவின் அரைநூற்றாண்டுக்கு மேலான வாழ்க்கையானது இலங்கைத் தீவின் பல்லின மக்களால் அதன் முக்கியத்துமும், தேவைப்பாடும் சிறப்பாகவே உணரப்பட்டது என்பதே ‘மனிதம்’ சிதைந்துபோன ‘யுத்த ப+மியின்’ வரலாறாக இருக்கிறது. கரவெட்டி, ஆனைப்பந்தி எனும் கிராமத்தில் வேலாயுதம் - ஈஸ்வரி தம்பதியினரக்கு பத்து சகோதரர்களுடன் பிறந்தவர்தான் மகேஸ்வரி அக்கா. கரவெட்டியில் ஈஸ்வரி அக்கா குடும்பம் பற்றி தெரியாதோரே இல்லை என்றே கூறலாம். ஏனெனில் அவர்களது குடும்பத்தில் சிறு வயதிலேயே தந்தையை இழந்ததினால் ஈஸ்வரி அக்கா வறுமையோடு போராடி தனது அனைத்துப் பிள்ளைகளுக்கம் சிறந்த கல்விச் செல்வம் கிடைக்க அரும்பாடுபட்டார். அத்துடன் சேவை மனப்பாண்மையையும் மனித வாழ்வின் மகத்துவங்களையும் தனது பிள்ளைகளுக்க ஊட்டி வளர்ப்பதற்கு தனது ஆயுழ் காலத்தையே அர்ப்பணம் செய்தார். வறுமையான மத்தியதர குடும்ப வாழ்விலும் தனது தாய் தனக்கு பெற்றுக்கொடுத்த கல்விச் செல்வத்தையும், பொறுப்பையும் தட்டிக்காழிக்காது தனக்கே உரிய பொறுப்படன் தாய் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த வேளையில் தனக்குரிய அரசு செல்வாக்கை பயன்படுத்தாது சாராரண மனுசியாக நிராயுதபாணியாக பார்க்கச்சென்ற வேளையில் மானிட விரோதிகள் கொலைகார பாதகங்கள், பாசிஸ்ட்டுக்கள் தமது கோழைத்தனத்தை ஒரு பெண்ணிடம் மிருகத்தனமான முறையில் கட்டவிழ்த்துவிட்டார்கள். சுடுகலன்களை தயாரிக்கும், விற்பனை செய்யும் நபர்களும் சரி அந்த உயிர்க் கொல்லியை வாங்கி உபயோகிப்பவனும்சரி பாசிச கும்பலை இயக்க பவனும் சரி ஒரு தாயின் பத்து மாதம் சுமக்கும் வலியையும், விசும்பலையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்கள் ஈனப்பிறவிகள், அரக்கர்கள், வன்முறை வெறியர்கள் இவர்களுக்கு எங்கே புரியப்போகிறது மானிடத்தின் மகத்துவம்? இந் நினைவுக் குறிப்பில் கரவெட்டி சமூக அமைப்பின் பின்புலங்களையும் அதற்கு மத்தியில் ஈஸ்வரி அக்க தனது குடும்பத்தை பன்முக குடும்பமாகவும் அநீதிக்கு, ஒடுக்குமுறைக்கு எதிராக குரலை வெளிப்படுத்தக்கூடிய போக்குணாம்ச குடும்பமாகவும் உருவாக்கி தமிழ் சமூகத்தளத்திற்கும் இலங்கை பல்லின தேசத்துக்கும் இனம், மொழிக்கு அப்பால் செய்த பங்களிப்புக்கள் நிச்சயமாக ஆவணமாகவும் வரலாற்று பதிவுகளாகவும் பேணப்படவேண்டிய ஒன்று. அப்போதுதான் கடந்த மூன்று சகாப்த காலமாக நடைபெற்றவரும் அர்த்தமற்ற கொடிய யுத்தத்தில், ‘நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும்’ என்று இளைய சமுதாயத்தை தீமூட்டும், உணர்ச்சியேற்றும், உசுப்பிவிடும் பிரதிகிதிகளுக்கு மத்தியிலும் யுத்தத்தை வியாபாரமாக பயன்படுத்தும் ‘கறுப்பு அங்கி’ அணிந்த ரௌடி அப்புக்காத்துக்களுக்கு மத்தியிலும் மகேஸ்வரி அக்கா தனது சட்டத்தரணி தொழிலை பொருள், பணம் ஈட்டுவதற்காகவோ, சுகபோக வாழ்க்கையை அமைப்பதற்காகவோ பயன்படுத்தாது யுத்தத்தால் நொடிந்து இழைத்துப்போன மக்களுக்காக ‘உன்னைப் போல் ஒருவன்’ என்பதற்கு அமைய ‘நம்புங்கள் நளை விடிவு பிறக்கும்’ எனும் பன்முக அகிம்ச தளங்களில் யாதார்த்தமான அரசியல் கருத்தியல்களை முன்வைத்து போராடியதின் மூலம் ‘மனிதருள் மிளிரும் மாணிக்கமாக’ அடுத்த தலைமுறை பெண்களுக்கு, காலத்தால் அழிக்கமுடியாத ‘காலச் சுவடுகளை’ ஈழப்போர் வரலாற்றில் ஆழமாக பதித்து சென்றுள்ளார். உலக வரலாற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்போக்குத்தனமான ஒடுக்குமுறை சமூகங்களில் இருந்தே ‘சமூக சிந்தனையாளர்கள் உருவாகிறார்கள் உதாரணமாக கார்ல் மாக்ஸ், அரிஸ்டோட்டில், சோக்கிரட்டீஸ், பிளேட்டோ, புத்தர், காந்தி எனப் பலரைக் குறிப்பிடலாம். வுரலாற்றில் தொடர்ச்சிகள் அதிர்வுகள் உலகப் பந்தில் ஒவ்வொரு சமூகத்திலும் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த அடிப்படையில் வரலாற்று சுழற்சியில் கரவெட்டியை எடுத்துக் கொண்டால் அடிப்படைவாத சமூக கட்டுமானத்தில் பல பிற்போக்குதனங்கள், மனித குலத்துக்கு ஒவ்வாத வாழ்க்கை நடைமுறைகள் இந்த நூற்றாண்டுக்கு பொருத்தமில்லாத அரசியல் சிந்தாந்தங்கள் என பல்வேறு விடையங்கள் மானிட வாழ்க்கையை பாதிக்கக்கூடிய அனைத்து மட்டங்களிலும் வாழ்வியல் அம்சங்களிலும் புரையோடிப்போய் இருந்தது. மிகவும் இறுக்கமான சமூகப் பின்னணியில் தீண்டாமைகள், ஏற்றத்தாழ்வுகள், சாதிக் கொடுமைகள், சமூகத்தின் அடித்தளத்து மக்களான நலிந்தவர்களை, பிற்ப்படுத்தப்பட்டவர்களை கல்விகள் மறுப்பது பொது இடங்களான கோயில்கள், தண்ணீர் குடிக்கும் கிணறுகளை பாவிக்க மறுப்பது உயர்சாதி பெருமிதங்கள், பெண்களை அடிமைத் தளத்தில் வைத்திருக்கும் குசினிக் கலாசார, பெண்களுக்கு படிப்பு எதற்கு என மறுக்கும் கடைந்தெடுத்த வறட்டு ஆண் ஆதிக்கங்கள் ‘பெண் சிரிச்சா போச்சு’ எனும் பிற்போக்குத் தனங்கள் சமூக பொது விடயங்களில் இணைந்து பணியாற்றுவதற்கான பெண்களுக்குள்ள உரிமைகளை மறுப்பது இப்படி கரவெட்டி சமூகத்தின் கொடுமைகளை கூறிக்கொண்டே போகலாம். இத்தகைய சமூகப் பின்னணியைக் கொண்ட சூழ்நிலையில்தான் விதவையான ரீச்சர் ஈஸ்வரி அக்கா தனது பிள்ளைகளை வெறுமனே பொருள் களஞ்சியம் சேமிப்பு, போலி சமூக அந்தஸ்து என்ற வட்டத்திற்குள் பிள்ளைகளை வளர்க்காது ‘ஒரு ஓவியன் சிற்பத்தை செதுக்குவது போலவும்’ ருஷ்ய அறிஞர் விக்டர் ய+கோ கூறியதுபோல, ‘ஒரு தேசத்தின் பிரஜையை பெற்றோரும், ஆசிரியருமே’ பொறுப்புள்ள தீவிர சமூக பிரக்ஞையுள்ள மனிதர்களாக உருவாக்குகிறார்கள் என்பதுடன் தவிர ‘மனித உரிமைக்காகவும்’ ‘மானிட சமத்து கௌரவத்துக்காகவும் பன்முக தளத்தில் செயற்படுவதுடன் நிறுத்தி விடாது உதவிகள் கேட்டு வருவோரிடம் எந்தவித பிரதிபலன்களையும் எதிர்பாராது கட்சி அரசியலுக்கு அப்பால் பேதமை பார்க்காது சிரித்த முகத்துடன் தமிழ் சமூகத்தின் வாழ்வியலை மேம்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டும் தனது பெறுமதிமிக்க வாழ்வையும் அர்பணிந்திருந்தார். கடந்த மூன்று தசாப்பத்திற்கு மேலான தமிழ், சமூகத்தின் ‘துன்பியல் வரலாற்றில்’ இன்றைய ‘துன்பியலுக்கும் துயரத்துக்கும்’ காரணமாக இருந்தவர்களான ‘தமிழ் ஈழம்’ கோஷம் போட்டவர்களும் தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று கூறினவர்களும் ஒரு வேளை சோற்றுக்கும் அகதி வாழ்வுக்கும் சாப விமோசனம் தூபம் போட்டவர்கள் இன்ற நிம்மதியாக கல்லறைகளில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக சாப விமோசனத்திற்கு ஒரு வழிப்பாதை காட்டியவர்களின் ஏகபோக வாரிசுகளாக புலிகள் தங்களை பிரகடனப்படுத்தி கடந்த முப்பது வருடமாக தமிழ் சமூகத்தின் அரசியல் உரிமைகளை பேசுவதற்கான குத்தகையை எடுத்திருந்தார்கள். இதன் விளைவாக தமிழ் சமூகத்திற்காக குரல் கொடுத்து போராடிய அனைத்து விடுதலை இயக்கங்களும், மிதவாத இடதுசாரி தலைமைகளும் புலிகளால் துரோகிகளாக அறிவிக்கப்பட்டு சிறுபான்மை சமூக அரசியல் தளத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டு துவம்சப்படுத்தி அழித்து நரபலி வேட்டையாடினார்கள். இந்த நரபலி வேட்டையை முடிவுக்கு கொண்டுவரும் ஆரம்ப ஆண்டாக 2002 ஐ குறிப்பிட வேண்டும் ஏனெனில் 9-11 சம்பவத்திற்கு பிறகு புலிகள் மீது சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதை குறிப்பிடலாம். புலிகளின் வரலாற்றிலேயே ஒரு தடவைதான் சர்வதேச பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி உள்நாட்டு செய்தியாளர்களும், சர்வதேச செய்தியாளர்களும் கிளிநொச்சியில் கூடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த பத்திரிகையாளர் மாநாட்டில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உயர் பாதுகாப்புடன், அன்ரன் பாலசிங்கத்துடன் வந்திருந்து பிதற்றல்களும், நியாயப்படுத்தல்களும், மிரட்டல்களும் இன்று புலித் தலைவனை காப்பாற்றும்படி உலகத்திடம் மண்டியிடலும், உயிருக்கு பிச்சை போடுமாறு ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் ஒரு மகத்தான் செய்தியை மனித குலத்துக்கு வெளிப்படுகிறது. ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ மகேஸ்வரி அக்காவின் கொலையிலும் அதுதான் நடந்திருக்கிறது. விதவைகளினதும், தாய்மார்களினதும் குழந்தைகளினதும் ‘பெருமூச்சு’ ஆயுததாரிகளையும் பாசிச வெறியர்களையும் சும்மாவிடாது. மனித உயர்களை கொல்பவர்களும், மனிதர்களை துயரத்தில் ஆழ்த்துபவர்களும் அதற்கான விலையை என்றோ ஒருநாள் கொடுக்க நேரிடும் என்பது உண்மை. ‘நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை இன்று இருக்கிறவர்கள் நாளை இல்லை’ இதுவே உலக நிதர்சனம். இதுவே உலக சத்திய வரலாறு. ஆனால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை அப்படியே இருக்கிறது அத்துடன் இன்று புதிதாக தமிழ் சமூகத்தின் அன்றாட ஜீவாதாரப் பிரச்சினையும் வேறுபல பிரச்சினைகளும் அவதாரம் எடுத்திருக்கின்றன. காலஞ்சென்ற இடதுசாரி அகஸ்தியர் கூறினார் ‘துப்பாக்கி முனைகள் அரசியலை தீர்மானிப்பவை அல்ல’ என இக்கருத்தியல் ஈழப்போராட்ட வரலாற்றில் நிதர்சனமாக பதிவாகி இருக்கிறது. இதை இன்னொரு கோணத்தில் நம் முதியோர் கூறுவார்கள், ‘சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது’ ஆம். கடந்த முப்பது வருட ஈழப்போராட்ட வரலாற்றில் ‘துப்பாக்கி முனையானது கொலைகளையே தீர்மானிக்கிறது’ கொலைகளைத் தவிர வேறு எந்த விமோசனத்தையும் தமிழ் மக்களுக்கு புலிகள் பெற்றுக் கொடுக்கவில்லை. இத்தகைய நெருக்கடிமிக்க சூழலில் கல்லறைக்கு அனுப்பவேண்டிய காலவதியான பாசிச கருத்தியல் கோட்பாடுகளும் கல்லறைகளில் இருந்து மீட்டு எடுக்க வேண்டிய பன்முகச் சிந்தனைக் கோட்பாடுகளும் வரலற்றில் ஓர் இடத்தில் எதிரும் புதிருமாக சந்திக்கின்றன. இந்த வரலாற்றுத் திருப்பு முனையில் புலிகளால் கொல்லப்பட்ட ரஜினி திரணகமவின் கதையை குறுந்திரைப்படமாக எடுத்து உலகுக்கும், தமிழ் சமூகத்துக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியதுபோல மகேஸ்வரி அக்கா, கேதீஸ் லோகநாதன், பத்மநாபா, சந்ததியார், தங்கத்துரை, சுபத்திரன் போன்றோரின் ஆளுமையையும் அரசியல் செயற்பாடுகளையும் குறுந்திரைப்படமாக்குவதுடன் இன்றுள்ள தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் ஓர் (ஊழஅஅழn பழயடஇ ஊழஅஅழn iவெநசநளவ) போன்ற விடயங்களை முன்னிறுத்தி கல்லறையில் இருந்து மீட்டெடுத்து கனவுகள் மெய்ப்பட னசநயஅ உழஅந என்பதுக்கு ஏற்ப மகேஸ்வரி அக்காவின் சிந்தனைகள் புத்துயிர் பெற அவவினது ஓராண்டு நினைவில் அனைவரும் பேதங்களை மறந்து, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மாற்றங்களை நோக்கி ஒருமித்து குரல் கொடுப்பதுடன் ‘மனித வாழ்க்கையானது மரணத்தின் பின்பும் முக்கியத்துவம் பெறுகிறது’ என்ற செய்தியை உலகுக்கு தெரிவிப்போம்.- தேவன். (கனடா)

No comments:

Post a Comment