13 May 2009

சிறுவர்கள் நிலைமை குறித்து ஐ. நா கவலை

இலங்கை மோதல் நிலைமைகளால் அங்கு சிறுவர்கள் பலியாவதை கண்டு தாம் பேரதிர்ச்சியடைவதாக ஆயுத மோதல்களில் சிக்கியுள்ள சிறார்களின் நலன்களுக்கான ஐ.நா சபையின் செயலாளர் நாயகத்தின் சிறப்பு பிரதிநிதி ராதிகா குமாரசாமி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறார்களின் நிலைமைகளை கணிப்பதற்காக தங்களின் சிறப்பு பிரதிநிதி ஒருவரை இலங்கைக்குள் அனுமதிக்க கோரி இலங்கை அரசிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார் பொதுவாக மக்கள் தொகையில் ஏறக்குறைய சரிபாதி சிறார்களாக இருப்பது வழமை என்கிற பொதுவிதியின் அடிப்படையில் பார்க்கும்போது, மோதல் பகுதியில் இன்னமும் சுமார் ஐம்பதாயிரம் பேரில் சரிபாதி 25,000 பேர் சிறார்களாக இருக்கலாமென மதிப்பிடுவதாக தெரிவித்தார்குழந்தைகள் பணயக் கைதிகளாக பிடிக்கப்படக் கூடாது. அவர்களை கட்டாயப்படுத்தி போராளிகளாக மாற்றி ஆயுத பாவனைகளில் அவர்களை ஈடுபடுத்தக்கூடாது. விடுதலைப்புலிகள் தம்மிடம் இருக்கும் அனைத்து சிறார்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அப்படி விடுவிக்கப்படும் சிறார்கள், அவர்களின் குடும்பங்களின் பராமரிப்பில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட வேண்டும். மோதலில் இருந்து தப்பிவந்த சிறார்கள் அரசால் உருவாக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். இந்த முகாம்கள் சர்வதேச தரத்தில் அமைக்கப்படவில்லை. இவ்வாறு ராதிகா குமாரசாமி பி.பி.சி க்கு தெரிவித்தார்

No comments:

Post a Comment