27 May 2009

தமிழ் மக்களின் இன்றைய அவலத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் பிரதான காரணம் - வீ. ஆனந்தசங்கரி

கேள்வி: இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்த மக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இருப்பினும் இது தொடர்பாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இராணுவத்தினரே தமிழ் மக்கள் மீது தாக்தல் நடத்தியதாக கூறினரே?

பதில்: இந்த விடயத்தில் நான் எந்தத் தரப்பையும் உத்தமத் தன்மையுடன் பார்க்கவில்லை. ஆனால் தமிழ் மக்களின் அண்மைக் கால அவலத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முக்கிய காரணம் என்பதனை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.

அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நான் சந்தித்த போது அவர் சில படங்களை என்னிடம் காட்டினார். அது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் தொடர்பான படங்களே. சில பச்சிளம் குழந்தைகளின் படங்களை அவர் எமக்குக் காண்பித்தார். அங்குள்ள சிறுவர்கள் வால் பேத்தைகள் போன்று காணப்பட்டனர். அந்தப் படங்களைப் பார்க்கும் எவரும் கண்ணீர் விடுவர். இவ்வாறான அக்கிரமத்தைச் சரி என்று வாதாடிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தன்னை அரசியல் கட்சி என்றோ, மக்கள் பிரதிநிதி என்றோ கூறத் தகுதியற்றது.

முழு விபரம் - http://www.lankatamilnews.com/index-A2.htm

No comments:

Post a Comment