27 May 2009

யாழ் மாநகரசபை, வவுனியா நகரசபை, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை சிறிது காலத்திற்கு ஒத்தி வைக்க- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பொதுச் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி

யாழ் மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகிய உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை அரசு அறிவித்துள்ளது.

ஜனநாயக சமூகத்தில் தேர்தல்கள் மக்களின் தெரிவு என்பன முக்கியத்துவம் வாய்ந்தவை.

எனினும் எமது மக்களில் ஒரு பகுதியினர் பெரும் இழப்புக்களைச் சந்தித்து சொல்லொணா அவலத்திற்கு முகம் கொடுத்து முகாம்களிலும், வைத்தியசாலைகளிலும் வாழ்கின்றனர். இவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய,ஆசுவாசப்படுத்த வேண்டிய இன பந்துக்களில் கணிசமானோர் தேர்தல் அறிவிக்கப்பட்ட மாநகர,நகரசபை பகுதிகளில் வாழ்கிறார்கள். இவற்றை மனங்கொண்டு சிறிது காலத்திற்கேனும் தேர்தலை ஒத்தி வைப்பது அவசியமானதென கருதுகிறோம்.

வடக்கில் வசந்தம் வீச வேண்டும் ஜனநாயகம் மிளிர வேண்டும்

எனினும்,யுத்தம் முடிந்த கையோடு தேர்தல் நடைபெறுவது பொருத்தமற்றதென நாம் கருதுகிறோம்.தேர்தலை சிறிது காலத்திற்கேனும் ஒத்தி வைக்குமாறு அரசை கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யின் பொதுச் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment