ஐ.நா.பிரதிநிதி வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு விஜயம்
ஐக்கிய நாடுகள் சபை செயலாளரின் விஷேட பிரதிநிதி கே. டி. நம்பியார் வவுனியா செட்டிக்குளம் ஆனந்த குமாரசாமி மற்றும் இராமநாதன் நலன்புரி கிராமங்களில் இடம்பெயர்ந்த மக்களின் நிலவரம் குறித்து ஆராய்ந்துள்ளார். அரசாங்கம் வழங்கி வரும் நிவாரணம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் கேட்டறிந்த பின்பு அங்கு கருத்து தெரிவித்த ஐ.நா வின் விசேட செயலாளர் இடம் பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணப் பணிகள் குறித்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததுடன் எதிர்காலத்திலும் ஐ.நா சபையின் நிவாரண உதவிகள் இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் அத்துடன் தனது இன்றைய விஜயம் ஐ.நா சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனின் வருகையை முன்னிட்டு தற்போதைய நிலவரம் குறித்து அறிவிப்பதாகவே அமைந்துள்ளது எனவும் கூறினார்.
No comments:
Post a Comment