13 May 2009

தொடர்ந்தும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தப்படுகிறது ஜோன் ஹோல்ம்ஸ்

இலங்கையின் போர் முனையில் இலங்கை அரசாங்கப் படையினர் தொடர்ந்தும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானப் பணிகளுக்கான இணைப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் ஜெனிவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார் நேற்றுமுன்தினம் நடந்த தாக்குதல்களில் பலர் காயமடைந்ததற்கு யார் பொறுப்பு என்பதை குறிப்பாக கூறாவிட்டாலும், இலங்கை இராணுவம் அங்கு தொடர்ந்தும் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதாகவும், அதேவேளை, யுத்த பகுதியில் அகப்பட்டுள்ள மக்களை விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் அங்கேயே பலவந்தமாக தடுத்து வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment