20 May 2009

இந்திய வெளியுறவு செயலாளர் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் இலங்கை வருகை

இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே நாராயணன் ஆகியோர் இலங்கை வந்துள்ளனர். இலங்கை வந்துள்ள இவர்கள் தமிழ் மக்களிற்கான அதிகாரப்பகிர்வு குறித்தும், இலங்கையின் மீள் கட்டுமாணத்திற்கு அன்பளிப்புக்கள், இடம்பெயர்ந்தோருக்கான மனிதாபிமான பணிகள் குறித்தும் ஆராயவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இலங்கை வருவதற்கு முன் தமிழக முதல்வர் மு.கருணாநிதியை சந்தித்து கலந்துரையாடி ஆலோசனைகள் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment